Friday, December 23, 2011

Tamil nadu

Tamil Nadu is one of the 28 states of India. Its capital and largest city is Chennai (formerly known as Madras). Tamil Nadu lies in the southernmost part of the Indian Peninsula and is bordered by Puducherry (Pondicherry), Kerala, Karnataka and Andhra Pradesh. It is bound by the Eastern Ghats in the north, the Nilgiri, the Anamalai Hills, and Palakkad on the west, by the Bay of Bengal in the east, the Gulf of Mannar, the Palk Strait in the south east, and by the Indian Ocean in the south.

Tamil Nadu is the eleventh largest state in India by area (about the size of Greece) and the seventh most populous state.[2] It is the fifth largest contributor to India's GDP[3] and the most urbanised state in India.[4] The state has the highest number (10.56%) of business enterprises in India,[5] compared to the population share of about 6%. It is one of the foremost states in the country in terms of overall development.[6][7]

The region has been the home of the Tamil civilization since at least 1500 BC, as attested by numerous archeological sites in and around Adichanallur. Its classical language Tamil has been in use in inscriptions and literature for 2500 years. Tamil Nadu is home to many natural resources, grand Hindu temples of Dravidian architecture, hill stations, beach resorts, multi-religious pilgrimage sites and eight UNESCO World Heritage Sites.

Monday, July 19, 2010

எலுமிச்சம் பழத்தின் பயன்!

உற்சாகம் தரும் எலுமிச்சை...
சுப காரியத்தில் முதல் இடம் வகிக்கும் பழம் தான் எலுமிச்சை. இது உலகெங்கும் நிறைந்து காணப்படும் பழமாகும். குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிறைந்த பழங்களில் எலுமிச்சையும் ஒன்று.
மனிதர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களை குணமாக்கும் சர்வ ரோக நிவாரணியாக எலுமிச்சை திகழ்கிறது. எலுமிச்சையின் தாயகம் பாரதம்தான்.
முதன்முதலாக 1784ல் கார்ஸ்வில் ஹெம்ஷீலி என்பவர் எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதைக் கண்டுபிடித்தார். மருத்துவர் ப்ளென்னின் (1875) ஆராய்ச்சியில் கெட்ட இரத்தத்தை தூய்மை படுத்தும் மருந்துகளில் எலுமிச்சையை விட சிறந்தது வேறு இல்லை என கண்டறிந்தார்.

உதாரணமாக இரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மனிய வீரர்களின் காயத்தில் இருந்து ஓழுகும் இரத்தத்தை உடனடியாக நிறுத்த எலுமிச்சையை உபயோகப் படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்தியர்களை விட மேலை நாட்டினர் எலுமிச்சை பழத்தையும், அதன் விதை, தோல் அனைத்தையும் மருந்தாக பயன்படுத்துகின்றனர். இதிலிருந்து வாசனைப் பொருட்களும் தயாரிக்கின்றனர். இந்தியர்களின் வீடுகளில் எலுமிச்சை ஊறுகாய் இல்லாமல் இருக்காது.

கண்களைப் பறிக்கும் மஞ்சள் நிறத்தில் மங்களகரமாய் காட்சிதரும் எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது.

100 கிராம் எலுமிச்சை பழத்தில்
நீர்ச்சத்து - 50 கிராம்
கொழுப்பு - 1.0 கிராம்
புரதம் - 1.4 கிராம்
மாவுப்பொருள் - 11.0 கிராம்
தாதுப்பொருள் - 0.8 கிராம்
நார்ச்சத்து - 1.2 கிராம்
சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.
பாஸ்பரஸ் - 0.20 மி.கி.
இரும்புச் சத்து - 0.4 மி.கி.
கரோட்டின் - 12.மி.கி.
தையாமின் - 0.2 மி.கி.
நியாசின் - 0.1 மி.கி.
வைட்டமின் ஏ - 1.8 மி.கி.
வைட்டமின் பி - 1.5 மி.கி.
வைட்டமின் சி - 63.0 மி.கி

எலுமிச்சையின் பயன்கள்
வயிறு பொருமலுக்கு
சிலருக்கு கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன்போல காணப்படும். வாயுவும் சேர்த்து தொல்லை கொடுக்க ஆரம்பிக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து அதில் வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் மேற்கண்ட தொல்லைகள் நீங்கும்.

தாகத்தைத் தணிக்க
அடிக்கடி தாகம் ஏற்படும் சிலருக்கு எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் தாகம் குறையாமல் இருக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து இரண்டு குவளை நீரில் சர்க்கரை சேர்த்து பருகினால் தாகம் தணியும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து அருந்தலாம்.

கல்லீரல் பலப்பட
எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறெடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும்.

தலைவலி நீங்க
ஒரு குவளை சூடான காபி அல்லது தேநீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, அரைமூடியை பிழிந்து சாறு கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும். காலை, மாலை என இருவேளையும் அருந்த வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு அருந்தி வந்தால் தலைவலி நீங்கும்.

நீர்க் கடுப்பு நீங்க
நீர்க்கடுப்பு பிரச்சனை சிலருக்கு அவதியை ஏற்படுத்தும். இந்நிலை நீங்க எலுமிச்சம் பழச் சாறுடன் சிறிது உப்பு கலந்து ஒருவாரம் அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும்.
இரத்தக் கட்டுக்கு
உடம்பில் எங்காவது அடிபட்டாலோ, வீங்கினாலோ ரத்தம் கட்டி இருக்கும். இந்தப் பகுதியை தொட்டாலே சிலருக்கு வலியெடுக்கும். இந்த ரத்தக்கட்டு நீங்க

 சுத்தமான இரும்புக் கரண்டியில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து அதில் சிறிதளவு கரிய போளத்தைப் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) போட்டு காய்ச்ச குழம்பு போல வரும். அதனை எடுத்து பொறுக்கும் அளவு சூட்டுடன் இரத்தக்கட்டு உள்ள பகுதிகளில் பற்று போட வேண்டும். இவ்வாறு காலை, மாலை இரு வேளையும் சுத்தம் செய்து பற்று போட்டு வந்தால் ரத்தக்கட்டு குணமாகும்.

பித்தம் குறைய
எலுமிச்சம் பழத்தை பிழிந்த சாற்றில் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தையும், அதே அளவு மிளகையும் கொஞ்சம் கலந்து வெயிலில் காயவைத்து காய்ந்தபின் நன்றாக பொடித்து எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். காலை மாலை இருவேளையும் இதில் அரை தேக்கரண்டி அளவு வாயிலிட்டு வெந்நீர் குடித்து வந்தால் பித்தம் குறையும்.

எலுமிச்சை தோல்
எலுமிச்சை பழத்தின் தோல், தோல் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கி சருமத்திற்கு பளபளப்பைத் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எலுமிச்சம் பழத்தோலில் அதிக சக்தி கொண்ட எண்ணெய் இருப்பதை அறிந்தனர். இது பலவகையான நறுமணத் தைலங்கள் செய்வதற்கும் உபயோகமாகிறது. மேலும் வாதம், எரிச்சல், தொண்டைப்புண் போன்ற வற்றிற்கு நல்லது.

நகச் சுற்று கொண்டவர்கள் எலுமிச்சம் பழத்தை விரலில் சொருகி வைத்தால் நகச்சுற்று குணமாகும். கிராமப் புறங்களில் இன்றும் இம்மருத்துவ முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எலுமிச்சம் பழத்தோலை உரித்தவுடன் அதன் மேல் வெள்ளையாக இருக்கும் சிறு தோலில் வைட்டமின் பி அதிகமாக உள்ளது.

எலுமிச்சம் பழம், உடலில் களைப்பைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.
எலுமிச்சம் பழச் சாறை உடலில் தேய்த்து குளித்தால் உடல் வறட்சி நீங்கும்.
· தாதுவைக் கெட்டிப்படுத்தும்.
· உடல் நமைச்சலைப் போக்கும்
·மாதவிலக்கின் போது உண்டாகும் வலியைக் குறைக்கும்.
· மூலத்திற்கு சிறந்த மருந்தாகும்.

எலுமிச்சம் பழத்தின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். இதன் மருத்துவப் பயனை உணர்ந்து ஆரோக்கியம் பெறுங்கள்.

Wednesday, June 30, 2010

School Bus...

சுட்டி சிறுவர்கள்...

"ஐய்யோ பள்ளி பேருந்து... ஆள விடுங்கடா சாமி..." சிட்டாக பறக்கும் சிறுவன்... (சிங்கமட நீ. அப்படியே, என்னை போலவே  உள்ளாயே!!!)...


விலையுர்ந்த பள்ளி பேருந்து(கோடீஸ்வரர்களின் குழந்தைகளுக்கான பேருந்து போலும்)...

விரைவு பள்ளி வாகனம்...


இதுவும் பள்ளி பேருந்துதானா(அட கடவளே, உன் படைப்பில் தான் எத்தனை பிரிவினைகள்!!!)....

Photoshop magic


Bfore











After

Tuesday, June 29, 2010

அவசர நிலை(Emergency)

அவசரகால நிலையும் இராணுவமயமாகும் ஜனநாயகமும்
எம்.ஜி. தேவசகாயம் அவர்களுடன் நேர்காணல்
நிருபர்:இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலம் என்று அழைக்கப்பட்ட அவசர நிலை (எமர்ஜென்சி) பிரகடனம் செய்யப்பட்டிருந்த காலத்தில் இந்திய ஆட்சிப் பணியில் இருந்த அதிகாரி நீங்கள். அவசரகால பிரகடனத்தை எதிர்த்து இரண்டாவது சுதந்திரப் போர் என்று எதிர்ப் பிரகடனம் செய்து போராட்டத்தில் ஈடுபட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணனுடம் நெருங்கிப் பழகியவர். இன்றுள்ள தலைமுறைக்கு அவசரகால நாட்களைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. 35 ஆண்டுகளுக்கு முன், 1975ஆம் ஆண்டில் இதே நாளில்தான் அன்றையப் பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்தார். அந்த நாட்களை நினைவு கூறுங்கள்


(FILE PICTURE)
எம்.ஜி. தேவசகாயம்: 1975ஆண்டு ஜூன் திங்கள் 25ஆம் நாள் இரவு அன்றையப் பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலைப் பிரகடனம் செய்தார். அன்றிலிருந்து அடுத்த 20 மாதங்களுக்கு நீடித்த அந்த அடக்குமுறைக் காலம், 35 ஆண்டுகள் சென்ற பிறகும் இந்த தேசத்தின் நினைவிகளில் நிழலாடிக்கொண்டுதான் இருக்கிறது. நமது நாட்டின் அரசமைப்பு உறுதி செய்த ஜனநாயக உரிமைகளையும், சுதந்திரத்தையும் நடைமுறையில் இல்லாமல் செய்யப்பட்ட நாட்கள் அவை.

இந்திய அரசமைப்புச் சட்டம் நமக்கு வழங்கிய சட்டத்தின் முன் அனைவரும் சமம் (பிரிவு 14), உயிருக்குப் பாதுகாப்பு மற்றும் தனி மனிதச் சுதந்திரம் (பிரிவு 21), கைது செய்து தடுத்து வைப்பதற்கு எதிராக பல்வேறு பாதுகாப்புகள் (பிரிவு 22) ஆகிய முக்கியமான உரிமைகள், சுதந்திரங்கள் அனைத்தும் குடியரசுத் தலைவரால் வெளியிடப்பட்ட பிரகடனத்தின் மூலம் முடக்கப்பட்டன. இவை மட்டுமின்றி, மக்களின் கழுத்தை நெறிக்கும் பல எதேச்சாதிகார சட்டங்களும், உத்தரவுகளும் நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தி நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. உள்நாட்டுப் பாதுகாபபு பராமரிப்புச் சட்டம் (Maintenance of Internal Security Act - MISA) போன்ற சட்டங்களும், உத்தரவுகளும், அரசமைப்பில் செய்யப்பட்ட திருத்தங்களும் நீதிமன்றம் சென்று சட்ட நிவாரணம் பெறும் வாய்ப்புகள் அனைத்தையும் பறித்தன. எவ்விதக் காரணமுமின்றி, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் எவரும் நீதிமன்றத்தை நாட முடியவில்லை.

அவசர நிலை பிறக்கப்பட்டிருந்த 20 மாத காலமும் பத்திரிக்கைச் சுதந்திரம் முடக்கப்பட்டிருந்தது. நாட்டில் நிலவிய இப்படிப்பட்ட அசாதரணமான சூழல் மக்களை அச்சப்படுத்தியது. எப்போதும் சத்தமாக வாழ்ந்து வந்த அவர்கள் ஒரு அழுத்தமான மெளனத்துடன் நடமாடிமானார்கள். ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு வளைந்து கொடுங்கள் என்று கேட்டதற்கு, அவர்களின் கட்டளைகளுக்கு தவழ்ந்து பணிவிடை செய்தனர் அதிகாரிகள். வாழ்வுரிமை பறிக்கப்பட்ட நிலையில் மக்கள் இருக்க, நீதித்துறையின் மேல் அமைப்புகளோ ஆட்சியாளர்களின் தூசிற்குத் தலை வணங்கி சேவை புரிந்தன. நேர்மையான சில அரசியல் தலைவர்கள் தவிர, மற்ற எல்லா வண்ண அரசியல்வாதிகளும். தலைவர்களும் முதுகெலும்பற்று மண்டியிட்டனர். இந்தியாவின் குடிமக்கள் ஒரு அராஜக அரசின் எதேச்சாதிகாரத்திற்கு கட்டுப்பட்டாக வேண்டிய சாதாரண குடிகளாயினர்.

“இந்த நாட்டின் வரையறைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன, ஆட்சியாளர்கள் இந்த நாடு முழுவதையும் தங்களுடையதாக்கிக் கொண்டுள்ளனர். ஆளும் கட்சியும், அதன் தலைவரும் இந்த நாட்டை தங்களுடைய பண்ணைச் சொத்தாக கருதுகின்றனர். இந்த நாட்டின் மையமான ஆட்சி அமைப்பை தங்களுடைய அரசியல் வாழ்வை காப்பாற்றிக் கொள்ளவும், தங்கள் குடும்பத்தின் மேம்பாட்டிற்குமாகவும் மாற்றிக் கொண்டுள்ள ஆட்சியாளர்கள், இந்த நாட்டின் சமூக கூட்டமைப்பின் மீது எதேச்சாதிகாரத்தை திணித்துள்ளனர். அரசியல் கத்துக்குட்டியான தனது குடும்ப உறுப்பினரைக் (சஞ்சய் காந்தி) கொண்டு நாடு முழுவதும் அச்சுறுத்ததலையும், பயங்கரவாதத்தையும் கட்டவிழ்த்துவிட்டு, அதன் மூலம் எல்லா அமைப்புகளையும் தூக்கி எறிந்து கேலிக் கூத்தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். 28 ஆண்டுக்கால ஜனநாயக வழிமுறை கொண்ட ஒரு நாட்டில் இது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்று மனித உரிமைப் போராளி ரஜ்னி கோத்தாரி அப்போது கூறினார்.


(FILE PICTURE)
ஆனால், வெள்ளை அறிக்கை என்ற பெயரில் ஒரு பொய் அறிக்கையை வெளியிட்டு அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டதை இந்திரா காந்தி நியாயப்படுத்தினார். ‘எதற்காக அவசர நிலை’ என்ற பெயரில் மத்திய அரசால் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், “நமது நாட்டில் ஒழுக்கத்தையும், நிலைத்தன்மையையும் நிலை நிறுத்தவே அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதும், அதனையொட்டி பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதற்கான காரணமுமாகும். இந்திய சமூகத்தின் பல்வேறு அங்கங்கள் இதனை வரவேற்கின்றன. ஜனநாயகத்தை சரியான பாதையில் கொண்டுவருவதற்குத்தான் பிரதமர் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்” என்று அந்த பொய்யறிக்கை கூறியது.

இந்தியாவில் வாழ்ந்த, இந்த உலகத்தின் மொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்காக இருந்த நம் மக்கள், அதனை ஏற்கவில்லை. 20 மாதங்களுக்குப் பிறகு மக்களவைக்கு நடைபெற்றத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து, மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மையுடன் எதிர்க்கட்சிகளை (ஜனதா கூட்டணி) ஆட்சியில் அமர்த்தினர்.

35 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும் அப்படிப்பட்ட ஒரு நிலைதான், ஒரு அறிவிக்கப்படாத எமர்ஜென்சி இந்த நாட்டில் நடைமுறையில் உள்ளது. கொடுமையான அந்தக் காலத்தின் நிழல் இப்போது நமது நாட்டின் மீது மீண்டும் படரத் துவங்கியுள்ளது.

நிருபர்: மீண்டும்....? எதனால் அப்படி கருதுகிறீர்கள்?

எம்.ஜி. தேவசகாயம்: அன்று பிறக்கப்பட்டதைப் போன்று காட்டுமிராண்டிச் சட்டங்கள், அதுபோன்ற மனித உரிமை மீறல்கள், மராட்டியம், ஆந்திரம், ஒரிசா, சட்டீஸ்கார், ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்கம் ஆகிய ஏழு மாநிலங்களில் பரவியிருக்கும் தண்டகாரண்ய வனப் பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களை வெளியேற்ற நடைபெறும் ‘பச்சை வேட்ட’ நடவடிக்கை ஆகியவற்றையெல்லாம் பார்க்குபோது இந்த நாடு மிக வேகமாக ஒரு காவல்துறையால் கட்டுப்படுத்தப்படும் காவல் அரசாக (Police State) ஆகிவருவது தெரிகிறது. இலங்கையில் நடைபெற்று வருவதைப் போல் இங்கேயும் நாட்டை இராணுவ மயமாக்கியிருப்பார்கள். ஆனால், இவ்வளவு பெரிய நாட்டில் அது சாத்தியமில்லை, அதுவே இலங்கைக்கும் இந்தியாவிற்கும் உள்ள ஒரே வேறுபாடு.

நிருபர்: இலங்கையோடு ஏன் ஒப்பிடுகிறீர்கள்?


(FILE PICTURE)
எம்.ஜி. தேவசகாயம்: எமர்ஜென்சியை அந்த நாடு தனது ஆளுமையின் ஒரு அங்கமாகவே ஆக்கிவிட்டது. அவசர நிலையை ஒவ்வொரு மாதமும் அது நீடித்துக் கொண்டேயிருக்கிறது. இதன் காரணமாக அந்த நாடு, காவல் துறையால் கட்டுப்படுத்தப்படும் நாடாக இருந்த நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இராணுவ மயமாக்கப்படும் அரசாகி வருகிறது.

அங்கே நடப்பதும், இங்கே நடந்துகொண்டிருப்பதற்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. இலங்கையில் அந்நாட்டு மக்கள் மீதே அந்நாட்டு அரசு தொடுத்தப் போர் முடிந்த பிறகு, ஜூன் 2009இல், டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் இயங்கிவரும் மனித உரிமைக் குழு ஒன்று கீழ்கண்டவாறு ஒரு மின்னஞ்சலை அனுப்பியது: “நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ‘பயங்கரவாத’ நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரியும் குழுக்களை ஒழிக்கப்போவதாக அறிவித்தது. இந்த அடிப்படையில்தான் சட்டீஸ்கர் மாநிலத்தின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒருவர், இலங்கையில் கடைபிடிக்கப்பட்ட அதே முறையை கையாண்டு மாவோயிஸ்ட்டுகளையும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களையும் ஒழிக்கப்போவதாகக் கூறியுள்ளார”.

இதனைத் தொடர்ந்தே, இந்த ஆண்டு மே மாதம், நக்சலைட்டுகளுக்கு எதிராக ஆயுதப் படைகளை பயன்படுத்துவது தொடர்பான தனது ‘நிபுணத்து’த்தை இலங்கை அரசு இந்தியாவிற்கு வழங்க முன்வந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது வெற்றி கண்டதற்குப் பிறகு நக்சலைட்டுகள் போன்ற கெரில்லா படைகளுக்கு எதிராக போர் நடத்துவதில் மிகத் தேர்ந்த படையாக சிறிலங்க படையினர் உள்ளனர் என்று இலங்கை அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். இலங்கையில் கடைபிடிக்கப்பட்ட அதே ‘முறையை’ பயன்படுத்தி, இந்த நாட்டிற்கு ‘மிகப் பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல’ என்று கருதப்படும் பழங்குடியினரை ஒழித்துக் கட்ட ஆயுதப் படைகளை பயன்படுத்துவது தொடர்பாக தனக்கு அதிக அதிகாரம் (Larger Mandate) அளிகப்ப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

இந்தப் பின்னணியில்தான், 1975ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 25ஆம் நாள் இரவு இந்தியாவில் பிரகடனம் செய்யப்பட்ட எமர்ஜென்சி நிலையை நமது மக்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். 35 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த கருப்புக் காலம் இந்த தேசத்தின் நினைவுகளில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. இன்று நமது நாட்டில் நிலவும் சூழல் ஓர் அறிவிக்கப்படாத அவசரகாலம் நிலவுகிறது என்பதைக் காட்டுகிறது, அதுவே பல்வேறு அமைப்புகளின் குரல்களிலும் எதிரொலிக்கிறது.


(FILE PICTURE)
நக்சலைட்டுகளை ஆதரிப்பவர்கள் மீது சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டபோது, “இது எமர்ஜென்சி காலத்தில் சமூகத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒடுக்குமுறையையே பிரதிபலிக்கிறது” என்று மனித உரிமை ஆர்வலர்கள் கண்டித்தனர். சி.என்.என்.ஐ.பி.என். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனது ‘ராஜ்நீதி’ திரைப்படத்திற்கு தணிக்ககைக் குழு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது குறித்து கருத்துத் தெரிவித்த தயாரிப்பாளரான பிரகாஷ் ஜா, “நாம் அவசர கால நிலையில் வாழ்கிறோமா?என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

போபால் விஷ வாயுக் கசிவு விபத்திற்குக் காரணமான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சன் நாட்டை விட்டு தப்பிச் செல்ல அன்றைய பிரதமர் ராஜீவ் காநதியே காரணம் என்று உண்மையைப் பேசியவர்களை ‘தேசப்பற்று அற்றவர்கள்’ என்று காங்கிரஸ் தலைமைக்கு குற்றேவல் புரிபவர்களால் தூற்றப்படுகின்றனர். எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தியை விமர்ச்சிதவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை இந்த மிரட்டல் நம் நினைவிற்கு கொண்டு வருகிறது.

“ஜூன் 26ஆம் தேதி எமர்ஜென்சியின் 35வது ஆண்டாகும். இப்போதும் இந்த நாட்டில் எமர்ஜென்சி காலம்தான் என்பதை (மத்திய அரசு அறிவிக்காததால்) இந்த நாட்டு மக்கள் அறிவிக்க வேண்டும்” என்று எழுத்தாளர் அருந்ததி ராய் கூறுவதற்கு இப்படிப்பட்ட அச்சங்கள்தான் தூண்டுதலாக இருந்திருக்க வேண்டும்.

நிருபர்: கொழும்புவும் டெல்லியும் இந்த அளவிற்கு ஒத்துப் போகக் காரணம் என்ன?

எம்.ஜி. தேவசகாயம்: அதிகார வெறிகொண்ட, குடும்ப ஆட்சியை நிலைநிறுத்தும் எண்ணங்களைக் கொண்டவர்களின் பிடியில்தான் டெல்லியும், கொழும்புவும் உள்ளது, இதுவே அவர்களை ‘நல்ல’ நண்பர்களாக்கியுள்ளது போலும். கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் ஒன்றிணைந்துதான் வன்னிக் காடுகளில் தங்கள் கூட்டுத் திட்டத்தை (Joint Venture) நிறைவேற்றினார்கள். இந்தியா கொடுத்த ‘நிபுணத்துவத்த’க் கொண்டு, ஒரு கண்ணியமான, ஜனநாயக உரிமைகளுக்காக போராடிய தமிழர்களை சிறிலங்க படைகள் காட்டுமிராண்டித்தனமான கொடூரத்துடன் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்தன. ‘தமிழர்களைக் கொன்று குவித்த ரத்தக் கறை நமது கைகளில் மட்டுமல்ல, நமது உடலில் மட்டுமல்ல, நமது மனசாட்சியிலும் மிக ஆழமாக படிந்துள்ளத’ என்று முன்னாள் தூதர் எம்.கே.பத்ரகுமார் கூறியுள்ளதை கவனித்தில் நிறுத்துங்கள்.


(FILE PICTURE)
எமர்ஜென்சியை கூர்மையான கருவியாக்கி தமிழனப் படுகொலையை நிகழ்த்தி முடித்த இலங்கை, காவல் அரசாக இருந்துவந்த நிலையில் இருந்து இராணுவ மய அரசாக மாறிக் கொண்டிருக்கிறது. கண்ணியமிக்க, ஜனநாயக உரிமைகளுடன் கூடிய ஒரு வாழ்க்கைக்காக போராடிவரும் தண்டகாரண்ய பழங்குடியின மக்களை கொன்றொழிக்க, தமிழர்களுக்கு எதிரான போரில் தான் பெற்ற ‘நிபுணத்துவத்த’ இந்தியாவிற்கு வழங்க சிறிலங்க அரசு முன்வந்துள்ளது. அதன் கூட்டுத் திட்டத்தையும் (Joint Venture) ஏற்க இங்குள்ள சிலர் ஆர்வமாயிருக்கின்றனர்.

அவசர நிலை விட்டுச் சென்ற மிக ஆபத்தான சொத்துதான் காவல் அரசு. அதை விட மோசமானது இராணுவ மயம். “வரலாற்றில் இருந்து தாங்கள் கற்க வேண்டியதை தவற விடுபவர்கள், அதே தவறைச் செய்து அழிந்து போவார்கள்” என்று வின்ஸ்டன் சர்ச்சில் கூறியுள்ளார். நாட்டை இராணுவ மயமாக்கல் போன்ற வரலாற்றுத் தவறுகளை நாமும் செய்வோமானால், அது தெற்காசியாவில் நிலவி வரும் ஜனநாயகத்திற்கு பேரழிவாகவே முடியும். அதற்கான சான்று நம் வீட்டு புறக்கடையிலேயே உள்ளது.
நிருபர்: நன்றி அய்யா. 
அனுப்பியவர் அன்பு நண்பர் D.சரவண குமார்
                                                 (மயிலாடுதுறை)
நன்றி நண்பரே!

Tuesday, June 22, 2010

தமிழின் சிறப்பு

ஒன்று முதல் மகாயுகம் வரையுள்ள தமிழ் எண்களின் எண்ணிக்கைகள், தமிழின் பெருமையை பறை சாற்றுகிறது.
என் அமிழ்து தமிழுக்கு நிகரேது!!!
 

Friday, June 18, 2010

மூன்று ரூபாய் நோட்டு

மெதுவாக ஊர்ந்து சென்ற பேருந்தைப் பற்றி உள்ளே சென்றதும் கண்கள் இருக்கைகளை நோட்டமிட்டன. முகம் மலர இருந்த ஓர் காலி இருக்கையை நிரப்பி பின் ஒரு பெரும்மூச்சிரைத்தேன். சிறிது கூட்டமே இருந்ததது. ஒரு பத்து ரூபாய் நோட்டை நீட்டியதும் நடத்துனர் முகம் சுழிக்க, அந்த கணத்தில் நான் ஒரு பரிதாப பார்வை பார்க்க பயண சீட்டையும், சில்லரைகளையும் விட்டெறிந்து சென்றார் என் அருமை நடத்துனர் நண்பர். மீதியை மேல்சட்டையில் இட்டுவிட்டு சன்னல் பக்கம் நோட்டமிட்டேன். ஓரிரு நிறுத்தங்கள் போனதும் ஒரு முதிய நண்பர் முன்னிருக்கையை  நிரப்பினார். என்னை போலவே பேருந்தினுள் நுழைந்ததும் அவர் வலது கையால், மேல்சட்டை பையைத் தடவி ஒரு பத்து ரூபாயை எடுத்து நடத்துனரின் வருகைக்காக காத்திருந்தார். அவரது துரதர்ஷ்டம் நடத்துனர் வெகுநேரமாக முன்பகுதிக்கு வருகை தரவில்லை. நேரம் செல்ல செல்ல  நண்பர் இறங்க வேண்டிய நிறுத்தமும், அதே நேரம் நடத்துனர் முன்பகுதிக்கு வரவும் சரியாய் இருந்தது. அந்த நண்பர் பயண சீட்டை பெறாமலேயே போய்விடுவார் என்று எண்ணிய என் எண்ணத்திற்கு மாறாக, பயண சீட்டை பெற்ற பின்னரே அவர் பேருந்திலிருந்து இறங்கினார். என்னுள்ளம் அவர் நேர்மைக்கு தலை வணங்கியது.
அடுத்த நிருத்தத்தில்லேயே இரு தொப்பி போட்ட காக்கிகள் நுழைந்தது பேருந்தினுள்ளே. ஏறியதும் நடத்துனரை பார்த்து அந்த ஆசாமிகள்  கையை அசைக்க, அவர்கள் உடையை பார்த்து அரசு ஊழியர்கள்(போக்கு வரத்துத்துறை ஊழிகள் அல்ல*) என்பதை புரிந்துகொண்டார் அருமை நடத்துனர் நண்பர். பாவம அவரால் என்ன செய்ய முடியும்,அதிகாரம் அவர்கள் கையிலல்லவா இருக்கிறது. அரசு வேலையில், நல்ல சம்பளமும் அதை விட அதிக கிம்பளமும் பெறும் இவர்களை போன்ற (ஒரு சில) ஆசாமிகளால் ஒட்டுமொத்த காக்கிகளுக்கேல்லவா அவமானம். ஒரு மூன்று ரூபாய் கொடுத்து பயண சீட்டை பெற, இவர்களுக்கு ஏன் இந்த தயக்கம். அந்த பெரியவரிடம் இருந்து இந்த காக்கிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
*குறிப்பு:போக்கு வரத்துத்துறை ஊழியர்களுக்கு மட்டுமே இல்லவச பயணம். மேலும் மாற்று திறனாளிகளுக்கும் இது பொருந்தும்.

Tuesday, June 15, 2010

என் மருத்துவர் 10வது fail ஆ!!!

கடந்த சில நாட்களில் தமிழகத்தின் சூடான செய்தி என்றால் இது தான்,மருத்துவத்தில் போலிகள். 'இன்று சோதனையில் மேலும் 20 பேர் கைது' என்று தினந்தோறும் வரும் செய்திகளே பல!!! இப்படியாக மொத்தம் 260 (தோரயமாக) பேர் தமிழகத்தில் முறையான மருத்துவம் பயிலாமலேயே மருத்துவராக வளம் வந்தது அம்பலம் ஆனது. உண்ணும் உணவில் கலப்படம் என்று தொடங்கி இப்போது மருத்துவத்திலும் கலப்படம்(போலிகள்) வந்து நமது வாழ்க்கை தரத்தை கேள்விக் குறியாக்கி உள்ளது. என் மருத்துவர் 10 வது fail ஆ!!! என்ற செய்திகள் நம்மை கதிகலங்க வைத்துள்ளது.
"what is your problem ?" என்ற மருத்துவரின் கேள்விக்கு, "நீங்க தான் problem " என்ற தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் திரு.விவேக்கின் நகைச்சுவை போல், நாமில் பலரின் வாழ்க்கையும் கேலி கூத்தாக மாறியுள்ளது. பத்தாவது முதல் M .Pharm  படித்த வரை பலரும் மருத்துனர் என்ற போர்வையில் வளம்வந்துள்ளனர். கால தாமதமாக செயல்பட்டாலும், இப்பொழுதாவது நடவடிக்கை எடுத்திருக்கும் காவல்துறைக்கு நமது கண்ணிய வணக்கங்களை உரித்தாக்கலாம். கிராமத்து மக்களில் பலர் மருத்துவர்களை உயிர் காக்கும் தெய்வமாகவே வணங்குகின்றனர். இந்த ஆசாமிகள் அத்தகைய கிராமபுரங்களையும் விட்டுவைக்கவில்லை. மருத்துவம் இப்போது வருவாய் ஈட்டும் தொழிலாக மாறிவிட்ட நிலையில் இது போன்ற களைகள் கொழித்து வளர தான் செய்யும். களைத்து எரிய வேண்டியது நமது கடமையே!

Thursday, June 10, 2010

தமிழ் அறிவோம்

 தமிழ் எண்கள் மற்றும் சில குறியீடுகள்
0 1 2 3 4 5 6 7 8 9 10 100 1000
நாள்     மாதம்     ஆண்டு    செலவு    வரவு    மேலே    ரூபாய்    எண்கள்
 

கொட்டை எழுத்தில் எழுதி வைக்க வேண்டியவை!!!

சாலையில் சென்றுகொண்டு இருக்கும் கார், திடீர் திடீரென்று தீபிடித்து எரியும் சம்பவங்களை அடிகடி செய்தித் தாள்களில் பார்க்கிறோம். கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே தமிழகத்தில் சுமார் எட்டு கார்கள் தீபிடித்து எரிந்ததாகப் புகார்கள் பதிவாகி இருகின்றன. புகார்கள் அளிக்காமல் இருந்தவர்கள் எத்தனை பேர் என்ற விபரம் தெரியவில்லை. கடந்த மே 11-ஆம் தேதி, சென்னை போரூர் அருகே நடந்த இதே விபத்தில் இப்போது முதல் முதலாக ஒரு உயிர் இழப்பும் நடந்துவிட்டது.
ஓடுகிற கார்கள் திடீர் திடீரென்று தீபிடிபதற்கு என்ன காரணம்?”என்று எல்லோருமே பதைபதைப்புடன் ஆராய்ந்து தெரிந்து கொண்டாலும், நாமில் பலர் இதை உடனடியாக மறந்தும் விடுகிறோம் என்பது தான் உண்மை!
இதுபோன்ற பல விபத்துகளில், காவல்துறையுடன் இணைந்து ஆய்வு நடத்திய அதிகாரிகள் மற்றும் தடைய  அறிவியல்  துறை  நிபுணர்கள்  பலரிடம்  பேசியதில், அவர்கள்  கூறிய  கருத்துகளை, கொட்டை  எழுத்தில்  எழுதி  வைக்க  வேண்டியதன்  அவசியம்  புரிந்தது.
கடந்த ஓராண்டு காலத்தில் நடைபெற்ற எட்டு ‘கார்  தீ ’சம்பவங்களையும் ஒன்று  சேர்த்துப்  பார்க்கும்போது, ஏறக்குறைய எல்லா விபத்துகளுக்கும் ஒரு ஒற்றுமை இருபது புரிந்தது.
ஆம்! எல்லா விபத்துகளுக்கும் மூலகாரணமாக விளங்கியது எலக்ட்ரிகல் ஷார்ட் சர்க்யுட் (electrical short circuit). எதிர்பரதவிதமாக  வாகனதிலுள்ள  electrical circuit fuse ஆகும்போது ,பணத்தையும்  நேரத்தையும்  மிச்சம்  பன்னுகின்றேன் பேர்வழி  என்று  பலர் , காரை  அங்கீகரிக்கப்பட்ட சர்விஸ் சென்டருக்கு(service centre) கொண்டு  செல்லாமல், பாகத்திலேயே  இருகிறார்கள்  என்ற  காரணத்துக்காக  முறையான  பயிற்ச்சியில்லதவர்களிடம் கொண்டு  சென்று  விடுகிறார்கள்.
சர்விஸ் சென்டர்களில் எலக்ட்ரிகல் சர்க்யுடைப் பழுது  பார்க்கும்போது, உச்சகட்ட  வெப்பத்தைத்  தாங்கக்கூடிய வகையில்  ஒயரைப்  பயன்படுத்துவார்கள். ஆனால், இந்தத்  தொழில்நுட்பத்தில்  தேர்ச்சி  பெறதவர்களோ, பிரச்சனையைச்  சரி  செய்ய  சாதாரண  ஒயர்களைப்  பயன்படுத்துவதற்கான  சாத்தியங்கள் அதிகம். காரில்  உச்சகட்டமாக  வெப்பம்  உருவாகும்போது, இந்த  சாதாரண  ஒயர்கள்  உருகி, காரே தீப்பிடிகவும் வாய்ப்பு இருக்கிறது.
சில  வாகனகளில்  வெறும் fuse மட்டுமே  போயிருக்கும்.ஆனால், இந்த  fuse மிக  முக்கியமானது. வாகனத்தின் ஏதாவது ஒரு இடத்தில  short circuit ஏற்பட்டால், உடனடியாக இந்த fuse ஒபெனாகி, மின்சாரத்தைத் தடை  செய்துவிடும். அதனால், கார் தீபிடிபது தவிர்க்கப்படும். இந்த விஷயத்திலும் சிலர் சிக்கனம் பார்த்து, original fuse -க்கு  பதிலாக  தற்காலிகத் தீர்வாக  ஒயரைச் சுற்றி விடுவார்கள். வெயில்  காலத்தில், அதிக  வெப்பத்தின்  காரணமாக  தரமில்லாத  ஒயர்கள்  உருகி  short circuit ஏற்படவும்  வாய்ப்பு  இருக்கிறது. இதெல்லாம் விபத்தை, "வா... வா..." என்று  வெற்றிலைப் பாக்கு வைத்து வரவேற்கும் செயல்களாகும்.
தமிழகத்தில் இதுவரை பல கார்கள் எரிந்து விபத்துகள் ஏற்படிருந்தாலும், உயிரிழப்புகள் நடந்ததில்லை. ஆனால், போரூரில் நடந்த விபத்தில் அதுவும்  நடந்தேறிவிட்டது. இதை ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ள  வேண்டியதுதான்  இந்த தருணத்தின் அவசர அவசியம். இந்த கட்டுரையை ஒரு வார ஏட்டில் படித்தபின் இதன் அவசியம் மிகையென புரிந்தது. பலரும் தெரிந்து பயனடைய, இதை இங்கு பதிக்கிறேன் என் பதிவாக!!!