Monday, July 19, 2010

எலுமிச்சம் பழத்தின் பயன்!

உற்சாகம் தரும் எலுமிச்சை...
சுப காரியத்தில் முதல் இடம் வகிக்கும் பழம் தான் எலுமிச்சை. இது உலகெங்கும் நிறைந்து காணப்படும் பழமாகும். குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிறைந்த பழங்களில் எலுமிச்சையும் ஒன்று.
மனிதர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களை குணமாக்கும் சர்வ ரோக நிவாரணியாக எலுமிச்சை திகழ்கிறது. எலுமிச்சையின் தாயகம் பாரதம்தான்.
முதன்முதலாக 1784ல் கார்ஸ்வில் ஹெம்ஷீலி என்பவர் எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதைக் கண்டுபிடித்தார். மருத்துவர் ப்ளென்னின் (1875) ஆராய்ச்சியில் கெட்ட இரத்தத்தை தூய்மை படுத்தும் மருந்துகளில் எலுமிச்சையை விட சிறந்தது வேறு இல்லை என கண்டறிந்தார்.

உதாரணமாக இரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மனிய வீரர்களின் காயத்தில் இருந்து ஓழுகும் இரத்தத்தை உடனடியாக நிறுத்த எலுமிச்சையை உபயோகப் படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்தியர்களை விட மேலை நாட்டினர் எலுமிச்சை பழத்தையும், அதன் விதை, தோல் அனைத்தையும் மருந்தாக பயன்படுத்துகின்றனர். இதிலிருந்து வாசனைப் பொருட்களும் தயாரிக்கின்றனர். இந்தியர்களின் வீடுகளில் எலுமிச்சை ஊறுகாய் இல்லாமல் இருக்காது.

கண்களைப் பறிக்கும் மஞ்சள் நிறத்தில் மங்களகரமாய் காட்சிதரும் எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது.

100 கிராம் எலுமிச்சை பழத்தில்
நீர்ச்சத்து - 50 கிராம்
கொழுப்பு - 1.0 கிராம்
புரதம் - 1.4 கிராம்
மாவுப்பொருள் - 11.0 கிராம்
தாதுப்பொருள் - 0.8 கிராம்
நார்ச்சத்து - 1.2 கிராம்
சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.
பாஸ்பரஸ் - 0.20 மி.கி.
இரும்புச் சத்து - 0.4 மி.கி.
கரோட்டின் - 12.மி.கி.
தையாமின் - 0.2 மி.கி.
நியாசின் - 0.1 மி.கி.
வைட்டமின் ஏ - 1.8 மி.கி.
வைட்டமின் பி - 1.5 மி.கி.
வைட்டமின் சி - 63.0 மி.கி

எலுமிச்சையின் பயன்கள்
வயிறு பொருமலுக்கு
சிலருக்கு கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன்போல காணப்படும். வாயுவும் சேர்த்து தொல்லை கொடுக்க ஆரம்பிக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து அதில் வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் மேற்கண்ட தொல்லைகள் நீங்கும்.

தாகத்தைத் தணிக்க
அடிக்கடி தாகம் ஏற்படும் சிலருக்கு எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் தாகம் குறையாமல் இருக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து இரண்டு குவளை நீரில் சர்க்கரை சேர்த்து பருகினால் தாகம் தணியும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து அருந்தலாம்.

கல்லீரல் பலப்பட
எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறெடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும்.

தலைவலி நீங்க
ஒரு குவளை சூடான காபி அல்லது தேநீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, அரைமூடியை பிழிந்து சாறு கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும். காலை, மாலை என இருவேளையும் அருந்த வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு அருந்தி வந்தால் தலைவலி நீங்கும்.

நீர்க் கடுப்பு நீங்க
நீர்க்கடுப்பு பிரச்சனை சிலருக்கு அவதியை ஏற்படுத்தும். இந்நிலை நீங்க எலுமிச்சம் பழச் சாறுடன் சிறிது உப்பு கலந்து ஒருவாரம் அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும்.
இரத்தக் கட்டுக்கு
உடம்பில் எங்காவது அடிபட்டாலோ, வீங்கினாலோ ரத்தம் கட்டி இருக்கும். இந்தப் பகுதியை தொட்டாலே சிலருக்கு வலியெடுக்கும். இந்த ரத்தக்கட்டு நீங்க

 சுத்தமான இரும்புக் கரண்டியில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து அதில் சிறிதளவு கரிய போளத்தைப் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) போட்டு காய்ச்ச குழம்பு போல வரும். அதனை எடுத்து பொறுக்கும் அளவு சூட்டுடன் இரத்தக்கட்டு உள்ள பகுதிகளில் பற்று போட வேண்டும். இவ்வாறு காலை, மாலை இரு வேளையும் சுத்தம் செய்து பற்று போட்டு வந்தால் ரத்தக்கட்டு குணமாகும்.

பித்தம் குறைய
எலுமிச்சம் பழத்தை பிழிந்த சாற்றில் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தையும், அதே அளவு மிளகையும் கொஞ்சம் கலந்து வெயிலில் காயவைத்து காய்ந்தபின் நன்றாக பொடித்து எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். காலை மாலை இருவேளையும் இதில் அரை தேக்கரண்டி அளவு வாயிலிட்டு வெந்நீர் குடித்து வந்தால் பித்தம் குறையும்.

எலுமிச்சை தோல்
எலுமிச்சை பழத்தின் தோல், தோல் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கி சருமத்திற்கு பளபளப்பைத் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எலுமிச்சம் பழத்தோலில் அதிக சக்தி கொண்ட எண்ணெய் இருப்பதை அறிந்தனர். இது பலவகையான நறுமணத் தைலங்கள் செய்வதற்கும் உபயோகமாகிறது. மேலும் வாதம், எரிச்சல், தொண்டைப்புண் போன்ற வற்றிற்கு நல்லது.

நகச் சுற்று கொண்டவர்கள் எலுமிச்சம் பழத்தை விரலில் சொருகி வைத்தால் நகச்சுற்று குணமாகும். கிராமப் புறங்களில் இன்றும் இம்மருத்துவ முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எலுமிச்சம் பழத்தோலை உரித்தவுடன் அதன் மேல் வெள்ளையாக இருக்கும் சிறு தோலில் வைட்டமின் பி அதிகமாக உள்ளது.

எலுமிச்சம் பழம், உடலில் களைப்பைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.
எலுமிச்சம் பழச் சாறை உடலில் தேய்த்து குளித்தால் உடல் வறட்சி நீங்கும்.
· தாதுவைக் கெட்டிப்படுத்தும்.
· உடல் நமைச்சலைப் போக்கும்
·மாதவிலக்கின் போது உண்டாகும் வலியைக் குறைக்கும்.
· மூலத்திற்கு சிறந்த மருந்தாகும்.

எலுமிச்சம் பழத்தின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். இதன் மருத்துவப் பயனை உணர்ந்து ஆரோக்கியம் பெறுங்கள்.

Wednesday, June 30, 2010

School Bus...

சுட்டி சிறுவர்கள்...

"ஐய்யோ பள்ளி பேருந்து... ஆள விடுங்கடா சாமி..." சிட்டாக பறக்கும் சிறுவன்... (சிங்கமட நீ. அப்படியே, என்னை போலவே  உள்ளாயே!!!)...


விலையுர்ந்த பள்ளி பேருந்து(கோடீஸ்வரர்களின் குழந்தைகளுக்கான பேருந்து போலும்)...

விரைவு பள்ளி வாகனம்...


இதுவும் பள்ளி பேருந்துதானா(அட கடவளே, உன் படைப்பில் தான் எத்தனை பிரிவினைகள்!!!)....

Photoshop magic


Bfore











After

Tuesday, June 29, 2010

அவசர நிலை(Emergency)

அவசரகால நிலையும் இராணுவமயமாகும் ஜனநாயகமும்
எம்.ஜி. தேவசகாயம் அவர்களுடன் நேர்காணல்
நிருபர்:இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலம் என்று அழைக்கப்பட்ட அவசர நிலை (எமர்ஜென்சி) பிரகடனம் செய்யப்பட்டிருந்த காலத்தில் இந்திய ஆட்சிப் பணியில் இருந்த அதிகாரி நீங்கள். அவசரகால பிரகடனத்தை எதிர்த்து இரண்டாவது சுதந்திரப் போர் என்று எதிர்ப் பிரகடனம் செய்து போராட்டத்தில் ஈடுபட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணனுடம் நெருங்கிப் பழகியவர். இன்றுள்ள தலைமுறைக்கு அவசரகால நாட்களைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. 35 ஆண்டுகளுக்கு முன், 1975ஆம் ஆண்டில் இதே நாளில்தான் அன்றையப் பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்தார். அந்த நாட்களை நினைவு கூறுங்கள்


(FILE PICTURE)
எம்.ஜி. தேவசகாயம்: 1975ஆண்டு ஜூன் திங்கள் 25ஆம் நாள் இரவு அன்றையப் பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலைப் பிரகடனம் செய்தார். அன்றிலிருந்து அடுத்த 20 மாதங்களுக்கு நீடித்த அந்த அடக்குமுறைக் காலம், 35 ஆண்டுகள் சென்ற பிறகும் இந்த தேசத்தின் நினைவிகளில் நிழலாடிக்கொண்டுதான் இருக்கிறது. நமது நாட்டின் அரசமைப்பு உறுதி செய்த ஜனநாயக உரிமைகளையும், சுதந்திரத்தையும் நடைமுறையில் இல்லாமல் செய்யப்பட்ட நாட்கள் அவை.

இந்திய அரசமைப்புச் சட்டம் நமக்கு வழங்கிய சட்டத்தின் முன் அனைவரும் சமம் (பிரிவு 14), உயிருக்குப் பாதுகாப்பு மற்றும் தனி மனிதச் சுதந்திரம் (பிரிவு 21), கைது செய்து தடுத்து வைப்பதற்கு எதிராக பல்வேறு பாதுகாப்புகள் (பிரிவு 22) ஆகிய முக்கியமான உரிமைகள், சுதந்திரங்கள் அனைத்தும் குடியரசுத் தலைவரால் வெளியிடப்பட்ட பிரகடனத்தின் மூலம் முடக்கப்பட்டன. இவை மட்டுமின்றி, மக்களின் கழுத்தை நெறிக்கும் பல எதேச்சாதிகார சட்டங்களும், உத்தரவுகளும் நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தி நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. உள்நாட்டுப் பாதுகாபபு பராமரிப்புச் சட்டம் (Maintenance of Internal Security Act - MISA) போன்ற சட்டங்களும், உத்தரவுகளும், அரசமைப்பில் செய்யப்பட்ட திருத்தங்களும் நீதிமன்றம் சென்று சட்ட நிவாரணம் பெறும் வாய்ப்புகள் அனைத்தையும் பறித்தன. எவ்விதக் காரணமுமின்றி, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் எவரும் நீதிமன்றத்தை நாட முடியவில்லை.

அவசர நிலை பிறக்கப்பட்டிருந்த 20 மாத காலமும் பத்திரிக்கைச் சுதந்திரம் முடக்கப்பட்டிருந்தது. நாட்டில் நிலவிய இப்படிப்பட்ட அசாதரணமான சூழல் மக்களை அச்சப்படுத்தியது. எப்போதும் சத்தமாக வாழ்ந்து வந்த அவர்கள் ஒரு அழுத்தமான மெளனத்துடன் நடமாடிமானார்கள். ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு வளைந்து கொடுங்கள் என்று கேட்டதற்கு, அவர்களின் கட்டளைகளுக்கு தவழ்ந்து பணிவிடை செய்தனர் அதிகாரிகள். வாழ்வுரிமை பறிக்கப்பட்ட நிலையில் மக்கள் இருக்க, நீதித்துறையின் மேல் அமைப்புகளோ ஆட்சியாளர்களின் தூசிற்குத் தலை வணங்கி சேவை புரிந்தன. நேர்மையான சில அரசியல் தலைவர்கள் தவிர, மற்ற எல்லா வண்ண அரசியல்வாதிகளும். தலைவர்களும் முதுகெலும்பற்று மண்டியிட்டனர். இந்தியாவின் குடிமக்கள் ஒரு அராஜக அரசின் எதேச்சாதிகாரத்திற்கு கட்டுப்பட்டாக வேண்டிய சாதாரண குடிகளாயினர்.

“இந்த நாட்டின் வரையறைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன, ஆட்சியாளர்கள் இந்த நாடு முழுவதையும் தங்களுடையதாக்கிக் கொண்டுள்ளனர். ஆளும் கட்சியும், அதன் தலைவரும் இந்த நாட்டை தங்களுடைய பண்ணைச் சொத்தாக கருதுகின்றனர். இந்த நாட்டின் மையமான ஆட்சி அமைப்பை தங்களுடைய அரசியல் வாழ்வை காப்பாற்றிக் கொள்ளவும், தங்கள் குடும்பத்தின் மேம்பாட்டிற்குமாகவும் மாற்றிக் கொண்டுள்ள ஆட்சியாளர்கள், இந்த நாட்டின் சமூக கூட்டமைப்பின் மீது எதேச்சாதிகாரத்தை திணித்துள்ளனர். அரசியல் கத்துக்குட்டியான தனது குடும்ப உறுப்பினரைக் (சஞ்சய் காந்தி) கொண்டு நாடு முழுவதும் அச்சுறுத்ததலையும், பயங்கரவாதத்தையும் கட்டவிழ்த்துவிட்டு, அதன் மூலம் எல்லா அமைப்புகளையும் தூக்கி எறிந்து கேலிக் கூத்தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். 28 ஆண்டுக்கால ஜனநாயக வழிமுறை கொண்ட ஒரு நாட்டில் இது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்று மனித உரிமைப் போராளி ரஜ்னி கோத்தாரி அப்போது கூறினார்.


(FILE PICTURE)
ஆனால், வெள்ளை அறிக்கை என்ற பெயரில் ஒரு பொய் அறிக்கையை வெளியிட்டு அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டதை இந்திரா காந்தி நியாயப்படுத்தினார். ‘எதற்காக அவசர நிலை’ என்ற பெயரில் மத்திய அரசால் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், “நமது நாட்டில் ஒழுக்கத்தையும், நிலைத்தன்மையையும் நிலை நிறுத்தவே அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதும், அதனையொட்டி பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதற்கான காரணமுமாகும். இந்திய சமூகத்தின் பல்வேறு அங்கங்கள் இதனை வரவேற்கின்றன. ஜனநாயகத்தை சரியான பாதையில் கொண்டுவருவதற்குத்தான் பிரதமர் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்” என்று அந்த பொய்யறிக்கை கூறியது.

இந்தியாவில் வாழ்ந்த, இந்த உலகத்தின் மொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்காக இருந்த நம் மக்கள், அதனை ஏற்கவில்லை. 20 மாதங்களுக்குப் பிறகு மக்களவைக்கு நடைபெற்றத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து, மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மையுடன் எதிர்க்கட்சிகளை (ஜனதா கூட்டணி) ஆட்சியில் அமர்த்தினர்.

35 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும் அப்படிப்பட்ட ஒரு நிலைதான், ஒரு அறிவிக்கப்படாத எமர்ஜென்சி இந்த நாட்டில் நடைமுறையில் உள்ளது. கொடுமையான அந்தக் காலத்தின் நிழல் இப்போது நமது நாட்டின் மீது மீண்டும் படரத் துவங்கியுள்ளது.

நிருபர்: மீண்டும்....? எதனால் அப்படி கருதுகிறீர்கள்?

எம்.ஜி. தேவசகாயம்: அன்று பிறக்கப்பட்டதைப் போன்று காட்டுமிராண்டிச் சட்டங்கள், அதுபோன்ற மனித உரிமை மீறல்கள், மராட்டியம், ஆந்திரம், ஒரிசா, சட்டீஸ்கார், ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்கம் ஆகிய ஏழு மாநிலங்களில் பரவியிருக்கும் தண்டகாரண்ய வனப் பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களை வெளியேற்ற நடைபெறும் ‘பச்சை வேட்ட’ நடவடிக்கை ஆகியவற்றையெல்லாம் பார்க்குபோது இந்த நாடு மிக வேகமாக ஒரு காவல்துறையால் கட்டுப்படுத்தப்படும் காவல் அரசாக (Police State) ஆகிவருவது தெரிகிறது. இலங்கையில் நடைபெற்று வருவதைப் போல் இங்கேயும் நாட்டை இராணுவ மயமாக்கியிருப்பார்கள். ஆனால், இவ்வளவு பெரிய நாட்டில் அது சாத்தியமில்லை, அதுவே இலங்கைக்கும் இந்தியாவிற்கும் உள்ள ஒரே வேறுபாடு.

நிருபர்: இலங்கையோடு ஏன் ஒப்பிடுகிறீர்கள்?


(FILE PICTURE)
எம்.ஜி. தேவசகாயம்: எமர்ஜென்சியை அந்த நாடு தனது ஆளுமையின் ஒரு அங்கமாகவே ஆக்கிவிட்டது. அவசர நிலையை ஒவ்வொரு மாதமும் அது நீடித்துக் கொண்டேயிருக்கிறது. இதன் காரணமாக அந்த நாடு, காவல் துறையால் கட்டுப்படுத்தப்படும் நாடாக இருந்த நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இராணுவ மயமாக்கப்படும் அரசாகி வருகிறது.

அங்கே நடப்பதும், இங்கே நடந்துகொண்டிருப்பதற்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. இலங்கையில் அந்நாட்டு மக்கள் மீதே அந்நாட்டு அரசு தொடுத்தப் போர் முடிந்த பிறகு, ஜூன் 2009இல், டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் இயங்கிவரும் மனித உரிமைக் குழு ஒன்று கீழ்கண்டவாறு ஒரு மின்னஞ்சலை அனுப்பியது: “நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ‘பயங்கரவாத’ நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரியும் குழுக்களை ஒழிக்கப்போவதாக அறிவித்தது. இந்த அடிப்படையில்தான் சட்டீஸ்கர் மாநிலத்தின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒருவர், இலங்கையில் கடைபிடிக்கப்பட்ட அதே முறையை கையாண்டு மாவோயிஸ்ட்டுகளையும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களையும் ஒழிக்கப்போவதாகக் கூறியுள்ளார”.

இதனைத் தொடர்ந்தே, இந்த ஆண்டு மே மாதம், நக்சலைட்டுகளுக்கு எதிராக ஆயுதப் படைகளை பயன்படுத்துவது தொடர்பான தனது ‘நிபுணத்து’த்தை இலங்கை அரசு இந்தியாவிற்கு வழங்க முன்வந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது வெற்றி கண்டதற்குப் பிறகு நக்சலைட்டுகள் போன்ற கெரில்லா படைகளுக்கு எதிராக போர் நடத்துவதில் மிகத் தேர்ந்த படையாக சிறிலங்க படையினர் உள்ளனர் என்று இலங்கை அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். இலங்கையில் கடைபிடிக்கப்பட்ட அதே ‘முறையை’ பயன்படுத்தி, இந்த நாட்டிற்கு ‘மிகப் பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல’ என்று கருதப்படும் பழங்குடியினரை ஒழித்துக் கட்ட ஆயுதப் படைகளை பயன்படுத்துவது தொடர்பாக தனக்கு அதிக அதிகாரம் (Larger Mandate) அளிகப்ப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

இந்தப் பின்னணியில்தான், 1975ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 25ஆம் நாள் இரவு இந்தியாவில் பிரகடனம் செய்யப்பட்ட எமர்ஜென்சி நிலையை நமது மக்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். 35 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த கருப்புக் காலம் இந்த தேசத்தின் நினைவுகளில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. இன்று நமது நாட்டில் நிலவும் சூழல் ஓர் அறிவிக்கப்படாத அவசரகாலம் நிலவுகிறது என்பதைக் காட்டுகிறது, அதுவே பல்வேறு அமைப்புகளின் குரல்களிலும் எதிரொலிக்கிறது.


(FILE PICTURE)
நக்சலைட்டுகளை ஆதரிப்பவர்கள் மீது சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டபோது, “இது எமர்ஜென்சி காலத்தில் சமூகத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒடுக்குமுறையையே பிரதிபலிக்கிறது” என்று மனித உரிமை ஆர்வலர்கள் கண்டித்தனர். சி.என்.என்.ஐ.பி.என். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனது ‘ராஜ்நீதி’ திரைப்படத்திற்கு தணிக்ககைக் குழு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது குறித்து கருத்துத் தெரிவித்த தயாரிப்பாளரான பிரகாஷ் ஜா, “நாம் அவசர கால நிலையில் வாழ்கிறோமா?என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

போபால் விஷ வாயுக் கசிவு விபத்திற்குக் காரணமான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சன் நாட்டை விட்டு தப்பிச் செல்ல அன்றைய பிரதமர் ராஜீவ் காநதியே காரணம் என்று உண்மையைப் பேசியவர்களை ‘தேசப்பற்று அற்றவர்கள்’ என்று காங்கிரஸ் தலைமைக்கு குற்றேவல் புரிபவர்களால் தூற்றப்படுகின்றனர். எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தியை விமர்ச்சிதவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை இந்த மிரட்டல் நம் நினைவிற்கு கொண்டு வருகிறது.

“ஜூன் 26ஆம் தேதி எமர்ஜென்சியின் 35வது ஆண்டாகும். இப்போதும் இந்த நாட்டில் எமர்ஜென்சி காலம்தான் என்பதை (மத்திய அரசு அறிவிக்காததால்) இந்த நாட்டு மக்கள் அறிவிக்க வேண்டும்” என்று எழுத்தாளர் அருந்ததி ராய் கூறுவதற்கு இப்படிப்பட்ட அச்சங்கள்தான் தூண்டுதலாக இருந்திருக்க வேண்டும்.

நிருபர்: கொழும்புவும் டெல்லியும் இந்த அளவிற்கு ஒத்துப் போகக் காரணம் என்ன?

எம்.ஜி. தேவசகாயம்: அதிகார வெறிகொண்ட, குடும்ப ஆட்சியை நிலைநிறுத்தும் எண்ணங்களைக் கொண்டவர்களின் பிடியில்தான் டெல்லியும், கொழும்புவும் உள்ளது, இதுவே அவர்களை ‘நல்ல’ நண்பர்களாக்கியுள்ளது போலும். கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் ஒன்றிணைந்துதான் வன்னிக் காடுகளில் தங்கள் கூட்டுத் திட்டத்தை (Joint Venture) நிறைவேற்றினார்கள். இந்தியா கொடுத்த ‘நிபுணத்துவத்த’க் கொண்டு, ஒரு கண்ணியமான, ஜனநாயக உரிமைகளுக்காக போராடிய தமிழர்களை சிறிலங்க படைகள் காட்டுமிராண்டித்தனமான கொடூரத்துடன் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்தன. ‘தமிழர்களைக் கொன்று குவித்த ரத்தக் கறை நமது கைகளில் மட்டுமல்ல, நமது உடலில் மட்டுமல்ல, நமது மனசாட்சியிலும் மிக ஆழமாக படிந்துள்ளத’ என்று முன்னாள் தூதர் எம்.கே.பத்ரகுமார் கூறியுள்ளதை கவனித்தில் நிறுத்துங்கள்.


(FILE PICTURE)
எமர்ஜென்சியை கூர்மையான கருவியாக்கி தமிழனப் படுகொலையை நிகழ்த்தி முடித்த இலங்கை, காவல் அரசாக இருந்துவந்த நிலையில் இருந்து இராணுவ மய அரசாக மாறிக் கொண்டிருக்கிறது. கண்ணியமிக்க, ஜனநாயக உரிமைகளுடன் கூடிய ஒரு வாழ்க்கைக்காக போராடிவரும் தண்டகாரண்ய பழங்குடியின மக்களை கொன்றொழிக்க, தமிழர்களுக்கு எதிரான போரில் தான் பெற்ற ‘நிபுணத்துவத்த’ இந்தியாவிற்கு வழங்க சிறிலங்க அரசு முன்வந்துள்ளது. அதன் கூட்டுத் திட்டத்தையும் (Joint Venture) ஏற்க இங்குள்ள சிலர் ஆர்வமாயிருக்கின்றனர்.

அவசர நிலை விட்டுச் சென்ற மிக ஆபத்தான சொத்துதான் காவல் அரசு. அதை விட மோசமானது இராணுவ மயம். “வரலாற்றில் இருந்து தாங்கள் கற்க வேண்டியதை தவற விடுபவர்கள், அதே தவறைச் செய்து அழிந்து போவார்கள்” என்று வின்ஸ்டன் சர்ச்சில் கூறியுள்ளார். நாட்டை இராணுவ மயமாக்கல் போன்ற வரலாற்றுத் தவறுகளை நாமும் செய்வோமானால், அது தெற்காசியாவில் நிலவி வரும் ஜனநாயகத்திற்கு பேரழிவாகவே முடியும். அதற்கான சான்று நம் வீட்டு புறக்கடையிலேயே உள்ளது.
நிருபர்: நன்றி அய்யா. 
அனுப்பியவர் அன்பு நண்பர் D.சரவண குமார்
                                                 (மயிலாடுதுறை)
நன்றி நண்பரே!

Tuesday, June 22, 2010

தமிழின் சிறப்பு

ஒன்று முதல் மகாயுகம் வரையுள்ள தமிழ் எண்களின் எண்ணிக்கைகள், தமிழின் பெருமையை பறை சாற்றுகிறது.
என் அமிழ்து தமிழுக்கு நிகரேது!!!
 

Friday, June 18, 2010

மூன்று ரூபாய் நோட்டு

மெதுவாக ஊர்ந்து சென்ற பேருந்தைப் பற்றி உள்ளே சென்றதும் கண்கள் இருக்கைகளை நோட்டமிட்டன. முகம் மலர இருந்த ஓர் காலி இருக்கையை நிரப்பி பின் ஒரு பெரும்மூச்சிரைத்தேன். சிறிது கூட்டமே இருந்ததது. ஒரு பத்து ரூபாய் நோட்டை நீட்டியதும் நடத்துனர் முகம் சுழிக்க, அந்த கணத்தில் நான் ஒரு பரிதாப பார்வை பார்க்க பயண சீட்டையும், சில்லரைகளையும் விட்டெறிந்து சென்றார் என் அருமை நடத்துனர் நண்பர். மீதியை மேல்சட்டையில் இட்டுவிட்டு சன்னல் பக்கம் நோட்டமிட்டேன். ஓரிரு நிறுத்தங்கள் போனதும் ஒரு முதிய நண்பர் முன்னிருக்கையை  நிரப்பினார். என்னை போலவே பேருந்தினுள் நுழைந்ததும் அவர் வலது கையால், மேல்சட்டை பையைத் தடவி ஒரு பத்து ரூபாயை எடுத்து நடத்துனரின் வருகைக்காக காத்திருந்தார். அவரது துரதர்ஷ்டம் நடத்துனர் வெகுநேரமாக முன்பகுதிக்கு வருகை தரவில்லை. நேரம் செல்ல செல்ல  நண்பர் இறங்க வேண்டிய நிறுத்தமும், அதே நேரம் நடத்துனர் முன்பகுதிக்கு வரவும் சரியாய் இருந்தது. அந்த நண்பர் பயண சீட்டை பெறாமலேயே போய்விடுவார் என்று எண்ணிய என் எண்ணத்திற்கு மாறாக, பயண சீட்டை பெற்ற பின்னரே அவர் பேருந்திலிருந்து இறங்கினார். என்னுள்ளம் அவர் நேர்மைக்கு தலை வணங்கியது.
அடுத்த நிருத்தத்தில்லேயே இரு தொப்பி போட்ட காக்கிகள் நுழைந்தது பேருந்தினுள்ளே. ஏறியதும் நடத்துனரை பார்த்து அந்த ஆசாமிகள்  கையை அசைக்க, அவர்கள் உடையை பார்த்து அரசு ஊழியர்கள்(போக்கு வரத்துத்துறை ஊழிகள் அல்ல*) என்பதை புரிந்துகொண்டார் அருமை நடத்துனர் நண்பர். பாவம அவரால் என்ன செய்ய முடியும்,அதிகாரம் அவர்கள் கையிலல்லவா இருக்கிறது. அரசு வேலையில், நல்ல சம்பளமும் அதை விட அதிக கிம்பளமும் பெறும் இவர்களை போன்ற (ஒரு சில) ஆசாமிகளால் ஒட்டுமொத்த காக்கிகளுக்கேல்லவா அவமானம். ஒரு மூன்று ரூபாய் கொடுத்து பயண சீட்டை பெற, இவர்களுக்கு ஏன் இந்த தயக்கம். அந்த பெரியவரிடம் இருந்து இந்த காக்கிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
*குறிப்பு:போக்கு வரத்துத்துறை ஊழியர்களுக்கு மட்டுமே இல்லவச பயணம். மேலும் மாற்று திறனாளிகளுக்கும் இது பொருந்தும்.

Tuesday, June 15, 2010

என் மருத்துவர் 10வது fail ஆ!!!

கடந்த சில நாட்களில் தமிழகத்தின் சூடான செய்தி என்றால் இது தான்,மருத்துவத்தில் போலிகள். 'இன்று சோதனையில் மேலும் 20 பேர் கைது' என்று தினந்தோறும் வரும் செய்திகளே பல!!! இப்படியாக மொத்தம் 260 (தோரயமாக) பேர் தமிழகத்தில் முறையான மருத்துவம் பயிலாமலேயே மருத்துவராக வளம் வந்தது அம்பலம் ஆனது. உண்ணும் உணவில் கலப்படம் என்று தொடங்கி இப்போது மருத்துவத்திலும் கலப்படம்(போலிகள்) வந்து நமது வாழ்க்கை தரத்தை கேள்விக் குறியாக்கி உள்ளது. என் மருத்துவர் 10 வது fail ஆ!!! என்ற செய்திகள் நம்மை கதிகலங்க வைத்துள்ளது.
"what is your problem ?" என்ற மருத்துவரின் கேள்விக்கு, "நீங்க தான் problem " என்ற தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் திரு.விவேக்கின் நகைச்சுவை போல், நாமில் பலரின் வாழ்க்கையும் கேலி கூத்தாக மாறியுள்ளது. பத்தாவது முதல் M .Pharm  படித்த வரை பலரும் மருத்துனர் என்ற போர்வையில் வளம்வந்துள்ளனர். கால தாமதமாக செயல்பட்டாலும், இப்பொழுதாவது நடவடிக்கை எடுத்திருக்கும் காவல்துறைக்கு நமது கண்ணிய வணக்கங்களை உரித்தாக்கலாம். கிராமத்து மக்களில் பலர் மருத்துவர்களை உயிர் காக்கும் தெய்வமாகவே வணங்குகின்றனர். இந்த ஆசாமிகள் அத்தகைய கிராமபுரங்களையும் விட்டுவைக்கவில்லை. மருத்துவம் இப்போது வருவாய் ஈட்டும் தொழிலாக மாறிவிட்ட நிலையில் இது போன்ற களைகள் கொழித்து வளர தான் செய்யும். களைத்து எரிய வேண்டியது நமது கடமையே!

Thursday, June 10, 2010

தமிழ் அறிவோம்

 தமிழ் எண்கள் மற்றும் சில குறியீடுகள்
0 1 2 3 4 5 6 7 8 9 10 100 1000
நாள்     மாதம்     ஆண்டு    செலவு    வரவு    மேலே    ரூபாய்    எண்கள்
 

கொட்டை எழுத்தில் எழுதி வைக்க வேண்டியவை!!!

சாலையில் சென்றுகொண்டு இருக்கும் கார், திடீர் திடீரென்று தீபிடித்து எரியும் சம்பவங்களை அடிகடி செய்தித் தாள்களில் பார்க்கிறோம். கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே தமிழகத்தில் சுமார் எட்டு கார்கள் தீபிடித்து எரிந்ததாகப் புகார்கள் பதிவாகி இருகின்றன. புகார்கள் அளிக்காமல் இருந்தவர்கள் எத்தனை பேர் என்ற விபரம் தெரியவில்லை. கடந்த மே 11-ஆம் தேதி, சென்னை போரூர் அருகே நடந்த இதே விபத்தில் இப்போது முதல் முதலாக ஒரு உயிர் இழப்பும் நடந்துவிட்டது.
ஓடுகிற கார்கள் திடீர் திடீரென்று தீபிடிபதற்கு என்ன காரணம்?”என்று எல்லோருமே பதைபதைப்புடன் ஆராய்ந்து தெரிந்து கொண்டாலும், நாமில் பலர் இதை உடனடியாக மறந்தும் விடுகிறோம் என்பது தான் உண்மை!
இதுபோன்ற பல விபத்துகளில், காவல்துறையுடன் இணைந்து ஆய்வு நடத்திய அதிகாரிகள் மற்றும் தடைய  அறிவியல்  துறை  நிபுணர்கள்  பலரிடம்  பேசியதில், அவர்கள்  கூறிய  கருத்துகளை, கொட்டை  எழுத்தில்  எழுதி  வைக்க  வேண்டியதன்  அவசியம்  புரிந்தது.
கடந்த ஓராண்டு காலத்தில் நடைபெற்ற எட்டு ‘கார்  தீ ’சம்பவங்களையும் ஒன்று  சேர்த்துப்  பார்க்கும்போது, ஏறக்குறைய எல்லா விபத்துகளுக்கும் ஒரு ஒற்றுமை இருபது புரிந்தது.
ஆம்! எல்லா விபத்துகளுக்கும் மூலகாரணமாக விளங்கியது எலக்ட்ரிகல் ஷார்ட் சர்க்யுட் (electrical short circuit). எதிர்பரதவிதமாக  வாகனதிலுள்ள  electrical circuit fuse ஆகும்போது ,பணத்தையும்  நேரத்தையும்  மிச்சம்  பன்னுகின்றேன் பேர்வழி  என்று  பலர் , காரை  அங்கீகரிக்கப்பட்ட சர்விஸ் சென்டருக்கு(service centre) கொண்டு  செல்லாமல், பாகத்திலேயே  இருகிறார்கள்  என்ற  காரணத்துக்காக  முறையான  பயிற்ச்சியில்லதவர்களிடம் கொண்டு  சென்று  விடுகிறார்கள்.
சர்விஸ் சென்டர்களில் எலக்ட்ரிகல் சர்க்யுடைப் பழுது  பார்க்கும்போது, உச்சகட்ட  வெப்பத்தைத்  தாங்கக்கூடிய வகையில்  ஒயரைப்  பயன்படுத்துவார்கள். ஆனால், இந்தத்  தொழில்நுட்பத்தில்  தேர்ச்சி  பெறதவர்களோ, பிரச்சனையைச்  சரி  செய்ய  சாதாரண  ஒயர்களைப்  பயன்படுத்துவதற்கான  சாத்தியங்கள் அதிகம். காரில்  உச்சகட்டமாக  வெப்பம்  உருவாகும்போது, இந்த  சாதாரண  ஒயர்கள்  உருகி, காரே தீப்பிடிகவும் வாய்ப்பு இருக்கிறது.
சில  வாகனகளில்  வெறும் fuse மட்டுமே  போயிருக்கும்.ஆனால், இந்த  fuse மிக  முக்கியமானது. வாகனத்தின் ஏதாவது ஒரு இடத்தில  short circuit ஏற்பட்டால், உடனடியாக இந்த fuse ஒபெனாகி, மின்சாரத்தைத் தடை  செய்துவிடும். அதனால், கார் தீபிடிபது தவிர்க்கப்படும். இந்த விஷயத்திலும் சிலர் சிக்கனம் பார்த்து, original fuse -க்கு  பதிலாக  தற்காலிகத் தீர்வாக  ஒயரைச் சுற்றி விடுவார்கள். வெயில்  காலத்தில், அதிக  வெப்பத்தின்  காரணமாக  தரமில்லாத  ஒயர்கள்  உருகி  short circuit ஏற்படவும்  வாய்ப்பு  இருக்கிறது. இதெல்லாம் விபத்தை, "வா... வா..." என்று  வெற்றிலைப் பாக்கு வைத்து வரவேற்கும் செயல்களாகும்.
தமிழகத்தில் இதுவரை பல கார்கள் எரிந்து விபத்துகள் ஏற்படிருந்தாலும், உயிரிழப்புகள் நடந்ததில்லை. ஆனால், போரூரில் நடந்த விபத்தில் அதுவும்  நடந்தேறிவிட்டது. இதை ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ள  வேண்டியதுதான்  இந்த தருணத்தின் அவசர அவசியம். இந்த கட்டுரையை ஒரு வார ஏட்டில் படித்தபின் இதன் அவசியம் மிகையென புரிந்தது. பலரும் தெரிந்து பயனடைய, இதை இங்கு பதிக்கிறேன் என் பதிவாக!!!

Wednesday, June 9, 2010

தமிழ்

"தமிழ் தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முக்கிய மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். தென்னிந்தியாவில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும், சிங்கப்பூரிலும் அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, துபாய், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி 50 இலட்சம் (85 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது."
என்று முன்னுரையுடன் தொடங்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் இணைய தளத்தில் தமிழின் வரலாற்றை அறிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பில் இணைக.
அல்லது 

Monday, June 7, 2010

கார்டூன் கார்னர்


 

மயான பூமி!

நேற்றுவரை பெற்றோருடன் இருந்த குழந்தை, அநாதையாய்த் தலையில் கட்டுடன்... முண்டாசைப் போன்ற அந்த பிளாஸ்திரி கட்டில் ’unknown’ என்ற ஆங்கில வாசகம்! கன்னத்தில் சிராய்ப்பு, கண்களில் குளம் கட்டிய நீர். அரிசிப் பல் தெரிய அழும் அக்குழந்தையின் புகைப்படம், மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ஞானேசுவரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தின் பின் விளைவு. இவ்வாறு 140 வாழ்க்கைகள் கணத்தில் சூனியமாகி யிருக்கின்றன. இதற்கான கொடிய சதித் திட்டங்களைத் தீட்டவும் செயல்படுத்தவும் துணியும் அமைப்புகளை ஒடுக்குவதும், அவற்றிடமிருந்து மக்களைக் காப்பதும் அரசின் பொறுப்பு; கடமை. ஆனால், பிரதமரோ, நாக்ஸல்களுக்கு எதிரான அரசின் கொள்கையை இப்போதுதான் சாவகாசமாக அறிவித்திருக்கிறார்! வளர்ச்சி அபிவிருத்தி திட்டங்களின் பயன்பாடு அடித்தட்டு மக்களுக்குக் கிட்டும் என்றும், கூடவே அரசின் இறையாண்மை யும் வலிமையுடன் இயங்கும் என்றும் தமது அரசின் ஆண்டறிக்கையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அரசு இயங்குவதற்குள், மேற்கு வங்கத்தில் நடந்தது போன்ற மேலும் அரை டஜன் சதித்திட்டங்களை, மாவோ தீவிரவாதிகள் அரங்கேற்றிவிட வாய்ப்பு இருக்கிறது!

தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவரும் அடித்தட்டு மக்களின் (குறிப்பாகப் பழங்குடியினர்) ஆதரவு இயக்கமாகத்தான் மாவோ இயக்கம் ஆரம்பமாயிற்று. ஆனால், இன்று அவ்வியக்கம் அந்த அடித்தட்டு மக்களையே கிள்ளுக் கீரையாக எண்ணி, சதித் திட்டங்களைத் தீட்டி, செயல்படுத்துகிறது. சத்திங்கரில் பஸ்ஸில் பயணம் செய்த 24 சாமானியர்கள், கண்மூடித்தனமாகக் குண்டு வைத்துக் கொல்லப்பட்டுள்ளனர்! பெட்ரோலியம் எண்ணெய் ஏற்றிச் சென்ற ரயில் ஒன்று, மாவோயிஸ்டுகளின் குண்டுக்கு இலக்காகிப் பற்றி எரிந்ததில், மக்களுக்குக் கோடிக் கணக்கில் நஷ்டம். இப்படியாக, சாமானிய மக்களின் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் தொடர்கதையாகி வருகின்றன.

“எங்கள் இலக்கு சாதாரண மக்கள் அல்ல; அதிகார வர்க்கம்தான்” என்று கூறிவந்த மாவோ இயக்கம், இப்போது அதிகார வர்க்கத்துக்குச் சங்கடம் உண்டாக்க சராசரி மக்களைப் பலிகொடுக்கத் துணிந்துவிட்டது!

கவனிக்கப்படாமல் விடப்பட்ட கிராம மக்கள், பழங்குடியினர் பலர் இருக்கவே செய்கிறார்கள். ஆனால், அவர்கள் ரயில் கவிழ்ப்புச் சதி போன்ற திட்டங்களை நிறைவேற்றவோ ஆதரிக்கவோ மாட்டார்கள்; தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களுக்கு மாவோ இயக்கம் அயல்நாட்டு வன்முறை இயக்கங்களிடமிருந்து உதவி பெற்று வருகிறது; தொடர்ந்து சீன ஆதரவு கிட்டி வருவதற்கான சாத்தியக் கூறுகள் மிக அதிகம். மத்திய அரசு மாவோ இயக்கத்தினருக்குத் தேதி குறிப்பிட்டு கடைசி கெடு வைத்து, பேச்சுவார்த்தைக்கு அழைக்கவேண்டும். அவர்கள் ஒப்பாவிடில் ராணுவத் தாக்குதல் நடத்தி அவ்வியக் கத்தினரை ஒழிப்பதில் தவறில்லை என்பதுடன் அது அரசின் கடமையும்கூட. இதன் பயனாகச் சில பல அப்பாவி உயிர்களும் பலியாகக் கூடும்தான். ஆனால், அதற்கு பயந்து அரசு கைகட்டி வேடிக்கை பார்த்தால், மாவோக்கள் வெகு விரைவில் இந்தியா வையே மயானமாக்கிவிடுவார்கள். அப்போது பலியாகும் அப்பாவி உயிர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது!
(குறிப்பு: இது ஒரு புத்தகத்தில் படித்தது)

பொட்டல் காடு

அண்மையில் நான் என் ஊர் திருவிழாவிற்கு  சென்றிருந்தேன். என் ஊர் கிராமம் என்பதால் நகரத்திலிருந்து பேருந்தில் பயணமானேன். பயணம் ஒரு மணி நேரமே. நான் ஏறிய நகர பேருந்து வழக்கம் போல அமை வேகத்தில் ஊர்ந்தது. நகர் எல்லையை விட்டு சற்று தூரம் சென்றதுமே இந்திய கிராமத்திற்கே உரித்தான அந்த ஒற்றையடி பாதை பிரிவு வந்தது. பேருந்து அகல பாதையிலிருந்து விலகி குறுகிய அப்பாதையில் கற்றை கிழித்து கொண்டு பறந்தது.(உண்மையாகவே காற்றின் வேகம் மிகையாக இருந்தது) எனவே நான் புத்தகத்தில் படித்து போல கற்றை கிழித்து கொண்டே சென்றது.ஜன்னல் ஓரம் கற்றை சுகித்து கொண்டு பலவற்றை ரசித்தேன். அருமையான வயல்வெளிகள் ஆங்காங்கே இருந்தது சற்று ஏமாற்றம் அளித்தது. பொட்டல் காடுகளே அதிகம் காணப்பட்டன. மிகவம் பழமை வாய்ந்த அந்த கிராமத்தை நகரமயமாக்கல் ஆட்கொண்டதை pearl nagar போன்ற அறிவிப்பு பலகைகளை பார்த்தே தெரிந்து நொந்தேன்.
மற்றும் பல இடத்தை ஆக்கிரமித்து இருந்த அடிகல்களும் இதற்கு சான்றாக இருந்தது.
கோவில் செல்லும் வரை என் உள்ளத்தில் இதை பற்றிய சிந்தனையே ஓடியது. இப்படி விளை நிலத்தையெல்லாம் வீட்டடி மனையாகினால் பிற்காலத்தில் புசித்தல் பெரும்பாடாகுமே என்ற எண்ணமே வலுத்தது. ஒரு காலத்தில் பசுமை கொழித்த அந்த கிராமம் இன்று போட்டலாயை இருப்பதை கண்டு மனம் வாடியது.
என்றாவது ஒரு நாள் எங்கும் பசுமை நிறைந்த ஓர் இடத்தை காண வேண்டும் என்பது என் அவ!!!!
நிறைவேறுமா? 

Saturday, June 5, 2010

What do Mechanical Engineers do in industry?

The variety of application fields and job functions available to Mechanical Engineers in industry is almost limitless.  Within a typical company most of the Mechanical Engineers will be found in three areas:  product engineering, plant engineering, and the manufacturing organization.
Product engineers design, develop, and test the company's products; for example, automobiles or computers.  Regardless of specific duties, these engineers share the responsibility for creating products, which are cost effective, competitive, producible, maintainable, and reliable.  Engineers contribute to this total effort as testing and evaluation specialists, stress analysts, designers, or parts fabrication or drafting room supervisors; the specializations are endless.  A significant point to remember, however, is that a good M.E. can handle almost any of them while also being familiar with the various manufacturing processes.
Manufacturing engineers have many different labels:  Process engineer, tool engineer, and master mechanic.  The manufacturing engineering organization, regardless of its local name, has the responsibility for designing and specifying the tooling and equipment necessary to produce the company's products at acceptable costs and quality.  Individual assignments tend to be specialized; for example, one engineer may deal primarily with sheet metal forming and welding, another with foundry processes.  Again, it is good to remember that an M.E. with a foundation in the basics can probably handle entry level assignments in most manufacturing engineering areas.  Manufacturing engineering can also be considered a subset of the total manufacturing organization, and this enhances the mobility of the M.E. in this part of the company.  It is not uncommon for Mechanical Engineers to move from a manufacturing engineering function to a supervisory or management position in the production organization.
The integration of computers into the manufacturing process has added to the options available to the manufacturing engineer.  Computer-aided-design (CAD) is often integrated with computer-aided-manufacturing (CAM) to yield computer-integrated-manufacturing (CIM) where paper is replaced by images in the form of data transferred from one location to another by wire.  This data is then used directly on the manufacturing floor.
The third concentration of M.E.'s in any organization will be found in the facilities or plant engineering activity.  These engineers are responsible for the design and maintenance of the plant buildings and utilities, for the environmental control within and surrounding the plant, and for supplying the energy used in the plant operation.  Thus, the Mechanical Engineers in plant engineering contribute both directly and indirectly to the company's efficiency and productivity.
At the corporate or company staff level, Mechanical Engineers are involved in research, design, and development activities in many application fields.  Functions are similar to those existing at the operating divisions, but the treatment may be more rigorous or advanced or require a wider financial support base than that available from a single division.  Although these corporate engineering support staffs hire young engineers directly from college, it is common for engineers to begin their careers at operating divisions and then transfer to corporate staffs based upon their interests and performance.
Two additional points should be considered in summarizing the role of Mechanical Engineers in industry.  First, many engineers eventually become managers; in fact, most young engineers state this as a career goal.  Normal career progression for an engineering manager involves beginning with an entry level job having a heavy and specific technical content.  Based upon successful performance in this technical job, the potential manager then moves through a series of positions which have more general technical content and an increasing managerial component.  A Mechanical Engineering background is entirely commensurate with this progression.  An M.E. education provides the qualifications for the prerequisite initial success as an engineer in the broadest possible number of entry level jobs as well as the analytical and problem solving skills requisite for management positions.
Secondly, although the variety of opportunities available for M.E.'s has been stressed, their positions in industry have some common characteristics, which promote a strong professional identity.  Virtually all of the jobs and functions mentioned above involve the application of basic and engineering science to the creation of complex mechanical systems, and most of those systems involve the conversion or transmission of energy.  Regardless of whether the design deals with an energy absorbing instrument panel, an assembly line robot, or a waste water recycling facility, the M.E. is practicing Mechanical Engineering, and knows  it.

Wednesday, June 2, 2010

என்ன செய்யலாம்?

சமீபத்தில் நடந்த கோர விமான விபத்து நம் அனைவரின் மனதையும் உலுக்கிய நிகழ்வுகளில் ஒன்று. பயணித்த 166 பேர்களில் 6 விமான ஓட்டிகள் உட்பட 158 பேர் பலி ஆனார்கள். மிகவும் அச்சரியம் என்னவென்றால் அதில் 8 பேர் படுங்கயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் நம் அதிகமா தரைவழி போக்குவரத்தையே பயன்படுத்துகிறோம். ஒட்டு மொத்தமாக 95% மக்கள் இதை தான் பயன்படுத்துகிறனர். விமான போக்குவரத்தை விட மிகவும் பாதுகாப்பான பயம் தரைவழி போக்குவரத்தே. இதிலும் விபத்து நடப்பதுண்டு. ஆனால் ஒரே விபத்தில் உயிர் இழப்பு சரசரியாக 10 பேரை தாண்டுவதில்லை. மேலும் பொருள் இழப்பும் குறைவே. ஆனால் விமான விபத்திலோ பலி எண்ணிக்கை நூற்றுக்கணக்கில்   தான். பொருள் இழப்பும் மிகையே. அடுத்து மக்கள் நடுவது கடல் வலி போக்குவரத்துக்கு, இதில் மிக குறைந்த மக்களே கடல்வழி பயணம் மேற்கொள்கின்றனர். காரணம் அதிக நேர பயணம். ஆனால் மிகவும் பாதுகாப்பான பயணம் கடல்வழி பயணமே. இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் நம்மால் முடிந்தவரை தரை மற்றும் கடல்வழி போக்குவரத்தில் உயிர் பிழைக்க முடியும். ஆனால் விமான விபத்தில் உயிர் பிழைப்பது மிகவும் கடினமே. மேலும் போதிய உயிர் பிழைக்கும் வழிமுறைகளை நாம் அறியாததே. எல்லா தொழில்நுட்பத்திலும் நம் வளர்ச்சி அடைந்த போதிலும், இப்படிப்பட்ட விபத்துகள் நம் முன்னேற்றத்தின் முட்டுக்கட்டைகலாவே உள்ளன. உலகளவில் கடந்த இரண்டு  ஆண்டுகளில் விமான பயணத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை மட்டுமே ஆயிரத்தை தாண்டிவிட்டது என்கிறது ஓர் கணக்கெடுப்பு. வெறும் 5% மக்கள் மட்டுமே பயணம் செய்வதில் 1000 என்பது, உயிர் இழப்பு சதவிகிதபடி பார்த்தால் சற்று அதிகமே. எனவே நாம்  இதற்கான தீர்வை விரைவில் தேடி பெற வேண்டும். இல்லையெனில் இந்த அவலம் தொடரும் என்பதில் ஐயமில்லை.
அடிக்கடி நிகழும் நிலநடுககளின் காரணமாக ஜப்பான் போன்ற மேலை நாடுகளில் நிலநடுக்கம் வரும் போது மக்கள் தங்களை எப்படி தற்க்காத்துகொள்வது போன்ற வழிமுறைகளை அங்குள்ள அனைவரும் அறிவர்.
அதே போல் இங்கும் செய்யலாமே!!!
என்னென்றால் அந்த 8 பேரும் உயிர் பிழைத்தது அவர்கள் கடைசி நேரத்தில் செய்த தற்காப்பு முயற்சிகளின் பயனே!!!
மேலும் என்னவெல்லாம் செய்யலாம்? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
குறிப்பு: உங்கள் சின்ன யோசனை கூட மிக பெரிய தொழில்நுட்பத்திற்கு வழி செய்யலாம்.

Rain drop in onion shape-why?

Do u like rain and rain bath. Ya everyone is like. Of-course me too like it. Now my question is "why does the rain drop fall in onion shape?"

answer will be posted after your replies...

விண்ணை(கடல்) தாண்டி வருவாளா!!!

காலை 10 மணிக்கே வெயில் சுட்டெரித்தது. வெளியில் சென்றால் தலையை பிளந்துவிடும் போலிருந்தது. வேர்வையும் காட்டாறாக ஊற்றெடுக்க எரிச்சலுடன் வீட்டிலேயே முடங்கி விட்டேன். மூன்று நாட்கள் முன் லைலா(புயலின் பெயர்) என்னமா வெயிலை தணித்தால். அந்த மூன்று நாட்களும் பகல் முழுதும் இதமான காற்றே தழுவி சென்றது. என்ன தான் லைலா கடலோர மாவட்டங்களை புரட்டி போட்டாலும் என் போல மதுரை வாசிகளை லைலா குளிர்வித்தாள். என்பது மறுக்க முடியாத உண்மையே. பருவ மழை காலங்கள் பொய்த்து விட்ட நிலையில் லைலா போன்றவர்கள் வந்து செல்வது இதமானதே. இன்னொரு முறை கடல் தண்டி வருவாளா!!!

- இப்படிக்கு பாமரன்

Why

Do you know why the flame burn upward direction only? (For an example: if you are keeping a candle vertical, horizontal or any position, the flame’s direction upward from the earth to sky) Why?

Note: Answer will be posted after your replies…

Keep addressing

My address is smile.

I don’t mind to give my address to everyone .

So you too please keep addressing . . .

-Dear Selva

நான் ரசித்தது

கிளி ஜோசியத்தில் நம்பிக்கை இல்லை, ஆனாலும் பார்த்தேன் . . .
அந்த கிளியின் இரு நிமிட சுதந்தரத்திற்காக ! ! !

Superb Quote

Be a good listener.

Your ears will never get you in trouble.

- Frank Tyger

All Computer Shortcuts

View the list of keyboard shortcuts for Windows XP at these links
http://support.microsoft.com/kb/301583
http://support.microsoft.com/kb/126449
use your PC efficiently with these shortcuts...
enjoy friends...

Stay alive in the wild

You may go to tour some forestry place in this summer. At that time, i want to give a superb role for you. Just imagine, you are missed from your group without any sources!!!

You don't have guidelines map and forgot your path to return back. You are forced to stay there. Even, you don't have food,water too... what do you do?

OK.... don't scare.... You can survive until somebody find you. I will tell a simple method to get atleast drinking water.

Just follow these steps.

Step 1

Build your solar still in the lowest, dampest area you can find at the base of a hill, in a dry stream bed. This is where ground water accumulates and is the best place for gathering it.

Step 2

Carry a transparent sheet of strong plastic of minimum 6 feet by 6 feet, a cup or a container, and 6 feet of plastic tubing with you in your pack. In extreme survival situations you may be forced to make due with whatever you have. Understanding the principles of the solar still will enable you to adapt to your situation.

Step 3

Dig a large hole in the ground, 2 feet deep and 3 feet in diameter. The idea is to dig down to damp soil.

Step 4

Place your container, centered, in the bottom of the hole.

Step 5

Place one end of your plastic tubing in the container.

Step 6

Cover the hole with the plastic sheet. Use the dirt from the hole to weight the plastic surrounding the hole, so that no air can escape. Make sure the free end of the plastic tubing is accessible.

Step 7

Use a small rock to weight the center of the plastic down over the cup, creating a cone over your cup with the point pointing into your cup.

Step 8

Understand that as the sun heats up the soil, moisture evaporates and condenses on the plastic. This condensed moisture drips to the lowest portion of the plastic and then drips off into your cup.

Step 9

Drink from your cup by sucking on the tubing. That way you don't have to disassemble your still to get a drink. If you haven't tube don't worry just disassemble and drink it from the container.

Realize that only pure water evaporates, so that in the evaporation process, most of the impurities are left in the soil. Let you try it in your survival situation. I will pray god to give you such a great situation in your life. enjoy friends....

Hi friends

hi fiends, i came here to share my views and thoughts with you. I feel very happy to put my foot prints here. This is not just for time pass or anything. It is just a place which my thoughts may surround your mind. With hope, i try to make this blog interesting and informative. I will meet soon with my posts................