Wednesday, June 2, 2010

என்ன செய்யலாம்?

சமீபத்தில் நடந்த கோர விமான விபத்து நம் அனைவரின் மனதையும் உலுக்கிய நிகழ்வுகளில் ஒன்று. பயணித்த 166 பேர்களில் 6 விமான ஓட்டிகள் உட்பட 158 பேர் பலி ஆனார்கள். மிகவும் அச்சரியம் என்னவென்றால் அதில் 8 பேர் படுங்கயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் நம் அதிகமா தரைவழி போக்குவரத்தையே பயன்படுத்துகிறோம். ஒட்டு மொத்தமாக 95% மக்கள் இதை தான் பயன்படுத்துகிறனர். விமான போக்குவரத்தை விட மிகவும் பாதுகாப்பான பயம் தரைவழி போக்குவரத்தே. இதிலும் விபத்து நடப்பதுண்டு. ஆனால் ஒரே விபத்தில் உயிர் இழப்பு சரசரியாக 10 பேரை தாண்டுவதில்லை. மேலும் பொருள் இழப்பும் குறைவே. ஆனால் விமான விபத்திலோ பலி எண்ணிக்கை நூற்றுக்கணக்கில்   தான். பொருள் இழப்பும் மிகையே. அடுத்து மக்கள் நடுவது கடல் வலி போக்குவரத்துக்கு, இதில் மிக குறைந்த மக்களே கடல்வழி பயணம் மேற்கொள்கின்றனர். காரணம் அதிக நேர பயணம். ஆனால் மிகவும் பாதுகாப்பான பயணம் கடல்வழி பயணமே. இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் நம்மால் முடிந்தவரை தரை மற்றும் கடல்வழி போக்குவரத்தில் உயிர் பிழைக்க முடியும். ஆனால் விமான விபத்தில் உயிர் பிழைப்பது மிகவும் கடினமே. மேலும் போதிய உயிர் பிழைக்கும் வழிமுறைகளை நாம் அறியாததே. எல்லா தொழில்நுட்பத்திலும் நம் வளர்ச்சி அடைந்த போதிலும், இப்படிப்பட்ட விபத்துகள் நம் முன்னேற்றத்தின் முட்டுக்கட்டைகலாவே உள்ளன. உலகளவில் கடந்த இரண்டு  ஆண்டுகளில் விமான பயணத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை மட்டுமே ஆயிரத்தை தாண்டிவிட்டது என்கிறது ஓர் கணக்கெடுப்பு. வெறும் 5% மக்கள் மட்டுமே பயணம் செய்வதில் 1000 என்பது, உயிர் இழப்பு சதவிகிதபடி பார்த்தால் சற்று அதிகமே. எனவே நாம்  இதற்கான தீர்வை விரைவில் தேடி பெற வேண்டும். இல்லையெனில் இந்த அவலம் தொடரும் என்பதில் ஐயமில்லை.
அடிக்கடி நிகழும் நிலநடுககளின் காரணமாக ஜப்பான் போன்ற மேலை நாடுகளில் நிலநடுக்கம் வரும் போது மக்கள் தங்களை எப்படி தற்க்காத்துகொள்வது போன்ற வழிமுறைகளை அங்குள்ள அனைவரும் அறிவர்.
அதே போல் இங்கும் செய்யலாமே!!!
என்னென்றால் அந்த 8 பேரும் உயிர் பிழைத்தது அவர்கள் கடைசி நேரத்தில் செய்த தற்காப்பு முயற்சிகளின் பயனே!!!
மேலும் என்னவெல்லாம் செய்யலாம்? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
குறிப்பு: உங்கள் சின்ன யோசனை கூட மிக பெரிய தொழில்நுட்பத்திற்கு வழி செய்யலாம்.

No comments:

Post a Comment