அண்மையில் நான் என் ஊர் திருவிழாவிற்கு சென்றிருந்தேன். என் ஊர் கிராமம் என்பதால் நகரத்திலிருந்து பேருந்தில் பயணமானேன். பயணம் ஒரு மணி நேரமே. நான் ஏறிய நகர பேருந்து வழக்கம் போல அமை வேகத்தில் ஊர்ந்தது. நகர் எல்லையை விட்டு சற்று தூரம் சென்றதுமே இந்திய கிராமத்திற்கே உரித்தான அந்த ஒற்றையடி பாதை பிரிவு வந்தது. பேருந்து அகல பாதையிலிருந்து விலகி குறுகிய அப்பாதையில் கற்றை கிழித்து கொண்டு பறந்தது.(உண்மையாகவே காற்றின் வேகம் மிகையாக இருந்தது) எனவே நான் புத்தகத்தில் படித்து போல கற்றை கிழித்து கொண்டே சென்றது.ஜன்னல் ஓரம் கற்றை சுகித்து கொண்டு பலவற்றை ரசித்தேன். அருமையான வயல்வெளிகள் ஆங்காங்கே இருந்தது சற்று ஏமாற்றம் அளித்தது. பொட்டல் காடுகளே அதிகம் காணப்பட்டன. மிகவம் பழமை வாய்ந்த அந்த கிராமத்தை நகரமயமாக்கல் ஆட்கொண்டதை pearl nagar போன்ற அறிவிப்பு பலகைகளை பார்த்தே தெரிந்து நொந்தேன்.
மற்றும் பல இடத்தை ஆக்கிரமித்து இருந்த அடிகல்களும் இதற்கு சான்றாக இருந்தது.
கோவில் செல்லும் வரை என் உள்ளத்தில் இதை பற்றிய சிந்தனையே ஓடியது. இப்படி விளை நிலத்தையெல்லாம் வீட்டடி மனையாகினால் பிற்காலத்தில் புசித்தல் பெரும்பாடாகுமே என்ற எண்ணமே வலுத்தது. ஒரு காலத்தில் பசுமை கொழித்த அந்த கிராமம் இன்று போட்டலாயை இருப்பதை கண்டு மனம் வாடியது.
என்றாவது ஒரு நாள் எங்கும் பசுமை நிறைந்த ஓர் இடத்தை காண வேண்டும் என்பது என் அவ!!!!
நிறைவேறுமா?
No comments:
Post a Comment