கடந்த சில நாட்களில் தமிழகத்தின் சூடான செய்தி என்றால் இது தான்,மருத்துவத்தில் போலிகள். 'இன்று சோதனையில் மேலும் 20 பேர் கைது' என்று தினந்தோறும் வரும் செய்திகளே பல!!! இப்படியாக மொத்தம் 260 (தோரயமாக) பேர் தமிழகத்தில் முறையான மருத்துவம் பயிலாமலேயே மருத்துவராக வளம் வந்தது அம்பலம் ஆனது. உண்ணும் உணவில் கலப்படம் என்று தொடங்கி இப்போது மருத்துவத்திலும் கலப்படம்(போலிகள்) வந்து நமது வாழ்க்கை தரத்தை கேள்விக் குறியாக்கி உள்ளது. என் மருத்துவர் 10 வது fail ஆ!!! என்ற செய்திகள் நம்மை கதிகலங்க வைத்துள்ளது.
"what is your problem ?" என்ற மருத்துவரின் கேள்விக்கு, "நீங்க தான் problem " என்ற தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் திரு.விவேக்கின் நகைச்சுவை போல், நாமில் பலரின் வாழ்க்கையும் கேலி கூத்தாக மாறியுள்ளது. பத்தாவது முதல் M .Pharm படித்த வரை பலரும் மருத்துனர் என்ற போர்வையில் வளம்வந்துள்ளனர். கால தாமதமாக செயல்பட்டாலும், இப்பொழுதாவது நடவடிக்கை எடுத்திருக்கும் காவல்துறைக்கு நமது கண்ணிய வணக்கங்களை உரித்தாக்கலாம். கிராமத்து மக்களில் பலர் மருத்துவர்களை உயிர் காக்கும் தெய்வமாகவே வணங்குகின்றனர். இந்த ஆசாமிகள் அத்தகைய கிராமபுரங்களையும் விட்டுவைக்கவில்லை. மருத்துவம் இப்போது வருவாய் ஈட்டும் தொழிலாக மாறிவிட்ட நிலையில் இது போன்ற களைகள் கொழித்து வளர தான் செய்யும். களைத்து எரிய வேண்டியது நமது கடமையே!
No comments:
Post a Comment