மெதுவாக ஊர்ந்து சென்ற பேருந்தைப் பற்றி உள்ளே சென்றதும் கண்கள் இருக்கைகளை நோட்டமிட்டன. முகம் மலர இருந்த ஓர் காலி இருக்கையை நிரப்பி பின் ஒரு பெரும்மூச்சிரைத்தேன். சிறிது கூட்டமே இருந்ததது. ஒரு பத்து ரூபாய் நோட்டை நீட்டியதும் நடத்துனர் முகம் சுழிக்க, அந்த கணத்தில் நான் ஒரு பரிதாப பார்வை பார்க்க பயண சீட்டையும், சில்லரைகளையும் விட்டெறிந்து சென்றார் என் அருமை நடத்துனர் நண்பர். மீதியை மேல்சட்டையில் இட்டுவிட்டு சன்னல் பக்கம் நோட்டமிட்டேன். ஓரிரு நிறுத்தங்கள் போனதும் ஒரு முதிய நண்பர் முன்னிருக்கையை நிரப்பினார். என்னை போலவே பேருந்தினுள் நுழைந்ததும் அவர் வலது கையால், மேல்சட்டை பையைத் தடவி ஒரு பத்து ரூபாயை எடுத்து நடத்துனரின் வருகைக்காக காத்திருந்தார். அவரது துரதர்ஷ்டம் நடத்துனர் வெகுநேரமாக முன்பகுதிக்கு வருகை தரவில்லை. நேரம் செல்ல செல்ல நண்பர் இறங்க வேண்டிய நிறுத்தமும், அதே நேரம் நடத்துனர் முன்பகுதிக்கு வரவும் சரியாய் இருந்தது. அந்த நண்பர் பயண சீட்டை பெறாமலேயே போய்விடுவார் என்று எண்ணிய என் எண்ணத்திற்கு மாறாக, பயண சீட்டை பெற்ற பின்னரே அவர் பேருந்திலிருந்து இறங்கினார். என்னுள்ளம் அவர் நேர்மைக்கு தலை வணங்கியது.
அடுத்த நிருத்தத்தில்லேயே இரு தொப்பி போட்ட காக்கிகள் நுழைந்தது பேருந்தினுள்ளே. ஏறியதும் நடத்துனரை பார்த்து அந்த ஆசாமிகள் கையை அசைக்க, அவர்கள் உடையை பார்த்து அரசு ஊழியர்கள்(போக்கு வரத்துத்துறை ஊழிகள் அல்ல*) என்பதை புரிந்துகொண்டார் அருமை நடத்துனர் நண்பர். பாவம அவரால் என்ன செய்ய முடியும்,அதிகாரம் அவர்கள் கையிலல்லவா இருக்கிறது. அரசு வேலையில், நல்ல சம்பளமும் அதை விட அதிக கிம்பளமும் பெறும் இவர்களை போன்ற (ஒரு சில) ஆசாமிகளால் ஒட்டுமொத்த காக்கிகளுக்கேல்லவா அவமானம். ஒரு மூன்று ரூபாய் கொடுத்து பயண சீட்டை பெற, இவர்களுக்கு ஏன் இந்த தயக்கம். அந்த பெரியவரிடம் இருந்து இந்த காக்கிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
*குறிப்பு:போக்கு வரத்துத்துறை ஊழியர்களுக்கு மட்டுமே இல்லவச பயணம். மேலும் மாற்று திறனாளிகளுக்கும் இது பொருந்தும்.

Kavalaye padatha mapla.... Nan CM ana vodane ellam maridum!! ;-)
ReplyDeleteவாழ்த்துக்கள் செல்வா. உங்கள் எழுத்தில் முதிர்ச்சி தெரிகின்றது. இதற்கு முன்பு எழுதிய தகவல்களுடன் ஒப்பிடுகையில் தெளிவாகத்தெரிகின்றது. பிழைகளைக்குறைத்திருக்கின்றீர்கள். உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDelete-தோழன்
கணேசன்
vrnew.blogspot.com