சாலையில் சென்றுகொண்டு இருக்கும் கார், திடீர் திடீரென்று தீபிடித்து எரியும் சம்பவங்களை அடிகடி செய்தித் தாள்களில் பார்க்கிறோம். கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே தமிழகத்தில் சுமார் எட்டு கார்கள் தீபிடித்து எரிந்ததாகப் புகார்கள் பதிவாகி இருகின்றன. புகார்கள் அளிக்காமல் இருந்தவர்கள் எத்தனை பேர் என்ற விபரம் தெரியவில்லை. கடந்த மே 11-ஆம் தேதி, சென்னை போரூர் அருகே நடந்த இதே விபத்தில் இப்போது முதல் முதலாக ஒரு உயிர் இழப்பும் நடந்துவிட்டது.
ஓடுகிற கார்கள் திடீர் திடீரென்று தீபிடிபதற்கு என்ன காரணம்?”என்று எல்லோருமே பதைபதைப்புடன் ஆராய்ந்து தெரிந்து கொண்டாலும், நாமில் பலர் இதை உடனடியாக மறந்தும் விடுகிறோம் என்பது தான் உண்மை!
இதுபோன்ற பல விபத்துகளில், காவல்துறையுடன் இணைந்து ஆய்வு நடத்திய அதிகாரிகள் மற்றும் தடைய அறிவியல் துறை நிபுணர்கள் பலரிடம் பேசியதில், அவர்கள் கூறிய கருத்துகளை, கொட்டை எழுத்தில் எழுதி வைக்க வேண்டியதன் அவசியம் புரிந்தது.
கடந்த ஓராண்டு காலத்தில் நடைபெற்ற எட்டு ‘கார் தீ ’சம்பவங்களையும் ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது, ஏறக்குறைய எல்லா விபத்துகளுக்கும் ஒரு ஒற்றுமை இருபது புரிந்தது.
ஆம்! எல்லா விபத்துகளுக்கும் மூலகாரணமாக விளங்கியது எலக்ட்ரிகல் ஷார்ட் சர்க்யுட் (electrical short circuit). எதிர்பரதவிதமாக வாகனதிலுள்ள electrical circuit fuse ஆகும்போது ,பணத்தையும் நேரத்தையும் மிச்சம் பன்னுகின்றேன் பேர்வழி என்று பலர் , காரை அங்கீகரிக்கப்பட்ட சர்விஸ் சென்டருக்கு(service centre) கொண்டு செல்லாமல், பாகத்திலேயே இருகிறார்கள் என்ற காரணத்துக்காக முறையான பயிற்ச்சியில்லதவர்களிடம் கொண்டு சென்று விடுகிறார்கள்.
சர்விஸ் சென்டர்களில் எலக்ட்ரிகல் சர்க்யுடைப் பழுது பார்க்கும்போது, உச்சகட்ட வெப்பத்தைத் தாங்கக்கூடிய வகையில் ஒயரைப் பயன்படுத்துவார்கள். ஆனால், இந்தத் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெறதவர்களோ, பிரச்சனையைச் சரி செய்ய சாதாரண ஒயர்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் அதிகம். காரில் உச்சகட்டமாக வெப்பம் உருவாகும்போது, இந்த சாதாரண ஒயர்கள் உருகி, காரே தீப்பிடிகவும் வாய்ப்பு இருக்கிறது.
சில வாகனகளில் வெறும் fuse மட்டுமே போயிருக்கும்.ஆனால், இந்த fuse மிக முக்கியமானது. வாகனத்தின் ஏதாவது ஒரு இடத்தில short circuit ஏற்பட்டால், உடனடியாக இந்த fuse ஒபெனாகி, மின்சாரத்தைத் தடை செய்துவிடும். அதனால், கார் தீபிடிபது தவிர்க்கப்படும். இந்த விஷயத்திலும் சிலர் சிக்கனம் பார்த்து, original fuse -க்கு பதிலாக தற்காலிகத் தீர்வாக ஒயரைச் சுற்றி விடுவார்கள். வெயில் காலத்தில், அதிக வெப்பத்தின் காரணமாக தரமில்லாத ஒயர்கள் உருகி short circuit ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. இதெல்லாம் விபத்தை, "வா... வா..." என்று வெற்றிலைப் பாக்கு வைத்து வரவேற்கும் செயல்களாகும்.
தமிழகத்தில் இதுவரை பல கார்கள் எரிந்து விபத்துகள் ஏற்படிருந்தாலும், உயிரிழப்புகள் நடந்ததில்லை. ஆனால், போரூரில் நடந்த விபத்தில் அதுவும் நடந்தேறிவிட்டது. இதை ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான் இந்த தருணத்தின் அவசர அவசியம். இந்த கட்டுரையை ஒரு வார ஏட்டில் படித்தபின் இதன் அவசியம் மிகையென புரிந்தது. பலரும் தெரிந்து பயனடைய, இதை இங்கு பதிக்கிறேன் என் பதிவாக!!!
Old cars fire accident aanal neenga solrathu ok but brand new nano car show roomla irunthu eduthu varumpothe erivathu eppadi?
ReplyDeleteAthu design fault fuel pipe line engine nerukkamaga thavarana idathil amaippathal yerpaduvathu.munnar cielo carkalil ippadi aanathu.
hi machi....
ReplyDeletenice post da...
great news da... its very useful...
keep going da..
very nice post
ReplyDeleteunmaivrumbi.
Mumbai.
Thank you Mr.Unmaivrumbi...
ReplyDelete